விஜய் டிவியில் இருந்து விலகும் பிரியங்கா.! "மைக்கை பிடித்தவர்கள் எல்லாம் ஆங்கர் ஆகிவிட முடியாது"

Vijay Television Anchor Priyanka Despande Left Job At Vijaytv

விஜய் டிவியின் மிகவும் டாப் தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மேலும் பாப்புலர் ஆனாலும் மீண்டும் விஜய் டிவிக்கே வந்து தற்போது நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி கொண்டு வருகிறார்.

இவருடயை கலகப்பான பேச்சால் ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக இவர் பிரபலமான சினிமா காரம் காபி , சூப்பர் சிங்கர் ஜூனியர் , சூப்பர் சிங்கர், தி வால் , ஸ்டார்ட் மியூசிக் , ஒல்லிபெல்லி , சூரிய வணக்கம் , இசை அன்ப்ளக்ட் , அழகிய பெண்ணே , போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இவர் விஜய் டிவி-யில் மட்டுமல்ல ஜீ தமிழ், சன் டிவி, சுட்டி டிவி, சன் மியூசிக் உள்ளிட்ட சேனல்களில் தொகுப்பாளராக புகழ் பெற்றார். அவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.கேக் வெட்டி, முகத்தில் எல்லாம் பூசி மகிழ்ச்சியாக பிரியங்கா பிறந்தநாளை கொண்டாடி முடித்திருக்கிறார். அந்த வீடியோவை அவர் ஒரு மாதம் கழித்து தற்போதுதான் வெளியிட்டு இருக்கிறார்.

Vijay Television Anchor Priyanka Despande Left Job At Vijaytv

அந்த வீடியோவில் பாலா உடன் பேசுகையில் தனக்கு 30 வயது ஆகிவிட்டது, அதனால் வயதானவர் போன்ற ஃபீல் வருகிறது. அதனால் நான் இதோடு தொலைக்காட்சியை விட்டுவிட்டு ஒரு பிரேக் எடுக்கலாம் என இருக்கிறேன் என தெரிவித்து இருக்கிறார் பிரியங்கா.அதற்கு பதில் சொன்ன பாலா “மைக்கை பிடித்தவர்கள் எல்லாம் ஆங்கர் ஆகிவிட முடியாது, மைக்கிற்கே பிடித்தவங்க தான் ஆங்கர். நீயே நினைத்தாலும் அது உன்னை விடாது” என கூறி பிரியங்காவின் முடிவை மாற்ற சொல்லி இருக்கிறார். இதனால் தனது முடிவை மாற்றி விட்டாராம் பிரியங்கா.

Share this post