விஜய் சேதுபதி வாழ்க்கையில் நடந்த ரியல் '96' கதை.. பள்ளி காதல் பற்றி முதல்முறையாக உருக்கம் !

Vijay sethupathi shares about his school love story

பெரிய பிரபலங்கள் படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர், பீஸ்சா, நானும் ரவுடி தான், இமைக்கா நொடிகள் போன்ற பல திரைப்படங்களில் மக்களை ஈர்க்கும் கதையில் பிடித்தமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆகி, தற்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் மக்கள் செல்வனாக உருவாகியுள்ளார்.

Vijay sethupathi shares about his school love story

எந்த விதமான கதைகளிலும் தயக்கம் காட்டாது நடித்து வரும் விஜய் சேதுபதி, இவர் நடிக்கும் முக்கால்வாசி திரைப்படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்து விடுகிறது. தற்போது, 2 ஹீரோ சப்ஜெக்டிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர்,மேலும், தற்போது வெளியாகி வேற லெவல் மாஸ் காட்டி வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து கெத்து காட்டி வருகிறார்.

Vijay sethupathi shares about his school love story

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் 2 பெரிய ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்த விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் சந்தானம் என்ற போதை கடத்தல் ஏஜண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. தற்போது, சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து அப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Vijay sethupathi shares about his school love story

இவர் சமீபத்தில் தன்னுடைய பள்ளி பருவ காதல் குறித்து பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. இவரது காதல் கதை, இவர் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘96’ படத்தின் கதை போலவே இருப்பதாக கூறி வருகிறார்கள்.

Vijay sethupathi shares about his school love story

விஜய் சேதுபதி தன்னுடைய பள்ளி பருவ காதல் குறித்து பகிர்ந்துள்ளதாவது.. நான் ‘ஜானு’ என்ற பெண் பின்னாடி சுமார் 4 வருடங்கள் சுற்றினேன். ஆனால் கடைசி வரை அந்தப் பொண்ணுக்கு அது தெரியாது. இப்போது கூட அது தெரியாமல் இருக்கலாம். அதன் பின் அவரை நான் பார்க்கவே இல்லை.

Vijay sethupathi shares about his school love story

என் திருமணத்திற்கு முன்பு, ஒரு நாள் என் தந்தையுடன் வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது அந்தப் பெண் மாதிரி ஒரு பெண் நடந்து போனாங்க, நான் வண்டியை திருப்பினேன் என் தந்தை ஏண்டா வண்டியை திருபுறனு கேட்டாரு, அப்போ நான் 4 வருடமா சைட் அடிச்ச பொண்ணு போகுதுன்னு நினைக்கிறேன், பாத்துட்டு போயிடலாம்னு சொன்னேன் அதன் பின் திரும்பி அவங்கள பார்க்க முடியவில்லை.

Vijay sethupathi shares about his school love story

இப்போது நான் திரும்ப பார்க்க வேண்டாம் என நினைக்கிறேன். எப்போ அதைப்பற்றி நினைத்தாலும் அந்த பொண்ணு, அப்படியே ஸ்கூல் யூனிபார்ம்மில் வர இமேஜ் தான் என் கண்ணுக்குள் வரும். அது ஒரு அழகான விஷயம். அந்தப் பழைய விஷயம் ரொம்ப அழகு, அது அப்படியே இருக்கட்டும் என்று நினைக்கிறேன். அதை அழிக்க வேண்டாம்னு நினைக்கிறேன்’ என மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.

Share this post