எப்படி டக்குனு இப்டி ஆனாரு? ஒரே புகைப்படத்தில் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்த விஜய் சேதுபதி!
பெரிய பிரபலங்கள் படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர், பீஸ்சா, நானும் ரவுடி தான், இமைக்கா நொடிகள் போன்ற பல திரைப்படங்களில் மக்களை ஈர்க்கும் கதையில் பிடித்தமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆகி, தற்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் மக்கள் செல்வனாக உருவாகியுள்ளார்.
எந்த விதமான கதைகளிலும் தயக்கம் காட்டாது நடித்து வரும் விஜய் சேதுபதி, இவர் நடிக்கும் முக்கால்வாசி திரைப்படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்து விடுகிறது. தற்போது, 2 ஹீரோ சப்ஜெக்டிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர்,மேலும், தற்போது வெளியாகி வேற லெவல் மாஸ் காட்டி வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து கெத்து காட்டி வருகிறார்.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் 2 பெரிய ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்த விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் சந்தானம் என்ற போதை கடத்தல் ஏஜண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. தற்போது, சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து அப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
தற்போது, விடுதலை, காந்தி டாக்ஸ், ஹிந்தியில் ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டுமே நடிக்காமல், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என முன்னணி நடிகர்கள் படங்களில் தலைகாட்டி வரும் விஜய் சேதுபதி, சில கதாபாத்திரங்களுக்கு பொருந்தாமல் மிகவும் குண்டாக இருப்பதாக சில நெகடிவ் விமர்சனங்கள் அவ்வப்போது எழுந்து வந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, விஜய் சேதுபதி, செம்ம பிட்டாக மாறியுள்ள புகைப்படம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மிக குறுகிய காலத்தில், விஜய் சேதுபதி எப்படி பிட்டாக மாறினார் என பலர் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.