ஒரே விழாவில் ரஜினி - கமல் - விஜய் - சூர்யா.. வைரலாகும் புகைப்படம்.. இது இன்னிக்கு நடக்குமா?

Vijay rajini surya kamal in stage function photo getting viral for vikram audio launch

அரசியல், நடிப்பு, பிக் பாஸ் என பிசியாக வலம் வந்த கமல் ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் திரைப்படம் விக்ரம். மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

தற்போது, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் விக்ரம்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளார்.

Vijay rajini surya kamal in stage function photo getting viral for vikram audio launch

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து புரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. இதற்கிடையே அனிருத் இசையில் விக்ரம் படத்தின் முதல் பாடல் ‘பத்தல பத்தல’ பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்பாடலை கமல் அவர்களே எழுதி பாடியுள்ளார்.

ரிலீசுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் இந்த படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகிய வண்ணம் உள்ளன.

வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று 15ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

கமல்ஹாசன் திரைப்படத்திற்கு நீண்ட வருடங்கள் கழித்து ஒரு இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், சூர்யா என பல்வேறு திரை நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay rajini surya kamal in stage function photo getting viral for vikram audio launch

இதன் காரணமாக இன்று மாலை அந்த பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவிற்கு எந்த பிரபலங்கள் எல்லாம் வர போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதன் நடுவே, சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மேடையில் ரஜினியும், கமலும் ஒன்றாக பேசி வந்தனர். அதில் சூர்யா, விஜய் பங்கேற்றுள்ளனர். இது போல ஒரு சம்பவம் இன்று நடக்குமா என்ற ஏக்கத்துடன் அந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.

Vijay rajini surya kamal in stage function photo getting viral for vikram audio launch

Share this post