Viral Video: ஜோதிகா, சிம்ரனை.. "குதிரை" என வர்ணித்த விஜய்.. நடிகரின் பேட்டி வீடியோவால் எழுந்த சர்ச்சை!
எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் தொடர்ந்து விஜய் - அஜித் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் திரைப்படம் குறித்த அறிவிப்பு வந்தாலே, சமூக வலைத்தளங்கள் தொடங்கி திரையரங்குகள் வரை கொண்டாட்டமாக மாறிவிடும். தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான விஜய், அஜித் படங்கள் வெளியாகும் போது, இருதரப்பு ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள் என்பது தெரிந்ததே.
2023ம் வருடம் பொங்கலுக்கு அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மோத உள்ள நிலையில், இதுகுறித்து விஜய் என்ன சொன்னார் என்று பிரபல நடிகர் ஷாம் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இந்த இரு படங்களிலுமே, அதிக ரசிகர்களைக் கொண்ட கோலிவுட் டாப் ஹீரோக்கள் நடித்துள்ளதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
அதே போல், அஜித்தை வைத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் எச்.வினோத் 3வது முறையாக இயக்கி அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் ஹார்டிக் வெற்றி பெறும் என அஜித் ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், இப்படங்களில் நடித்துள்ள பிரபலங்கள் சிலர் பேட்டியில் விஜய் அஜித் பற்றி பேசியும் இதுவரை பலருக்கும் தெரியாத விஷயங்கள் குறித்தும் பேசி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ஷாம் ஒரு பேட்டியின் போது இரு நடிகைகளை விஜய் வர்ணித்து பேசியது பற்றி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஷி படத்தில் விஜயுடன் ஷாம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இதனைத் தொடர்ந்து, இவரும் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியுள்ளார். அப்போது ஒருமுறை விஜயை நேரில் சந்தித்த போது, “வரும் போதே 2 குதிரைங்கள (ஜோதிகா, சிம்ரன்) கூட்டிட்டு வர.. யார்றா நீ” என கிண்டல் செய்திருக்கிறார். இதனை அப்படியே பேட்டியில் கூறியதை நெட்டிசன்கள் பலர் கடுமையாக விஜய்யை தாக்கி பேசியிருக்கிறார்கள். படத்தில் பெண்களை சிங்க பெண்கள் என பேசுவது, வெளியில் இப்படி குதிரைகள் என சொல்வதா என திட்டித்தீர்த்து வருகின்றனர்.
#Thunivu
— L Σ G Σ Π D (@SennaSati0nal) December 7, 2022
Casual ah olaritan Shyam 😂
Jyotika, Simran nu rendu Kudhirai ah otitu varriye Yarra nee nu ketruakan porukki @actorvijay pic.twitter.com/teoOhlNad7