நள்ளிரவில் சமந்தாவுக்கு சர்பிரைஸ் கொடுத்து கண்கலங்க வைத்த பிரபல நடிகர்.. வைரலாகும் வீடியோ

Vijay devarakonda surprises samantha midnight for her birthday party

தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர். தமிழ் மொழியில் தெறி, மெர்சல், 24 போன்ற திரைப்படங்களில் விஜய், சூர்யா போன்ற டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார்.

Vijay devarakonda surprises samantha midnight for her birthday party

தெலுங்கிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து, படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில் ஆட்டம் போட்டது பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனது.

Vijay devarakonda surprises samantha midnight for her birthday party

தற்போது, இவர் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கதீஜா கதாபாத்திரம் செம வைரல் ஆகி வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று சமந்தா தனது பிறந்தநாளை கொண்டாடினார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், விஜய் தேவரகொண்டா செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

Vijay devarakonda surprises samantha midnight for her birthday party

VD11 படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து வரும் நிலையில், படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. இதையடுத்து போலியாக ஒரு காட்சியை எழுதி, அதற்கு ஒத்திகையில், அதெல்லாம் பொய் என்று தெரியாமல் நள்ளிரவு நிஜமாகவே நடித்துக் கொண்டிருந்தார் சமந்தா.

Vijay devarakonda surprises samantha midnight for her birthday party

அதற்கு விஜய் தேவரகொண்டாவோ ஹேப்பி பர்த்டே சமந்தா என சொல்லவே, மொத்த படக்குழுவும் ஹேப்பி பர்த்டே சமந்தா என வாழ்த்தியது, கேக் வெட்டி கொண்டாடியது என சமந்தா கண் கலங்கிவிட்டார்.

Share this post