Liger படத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்த விஜய் தேவரகொண்டா.. ஆடையின்றி இருக்கும் போஸ்டர் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

Vijay devarakonda nude poster for liger film getting viral on social media

சின்னத்திரை சீரியல் இயக்குனராக தனது கலை பயணத்தை தொடங்கிய விஜய் தேவரக்கொண்டா, Nuvvila என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். Life is Beautiful, Yevade Subramanyam போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.

Vijay devarakonda nude poster for liger film getting viral on social media

பின்னர், Pelli Choopulu என்னும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் பெரும் பிரபலம் அடைந்தார். இப்படத்திற்காக பல விருதுகளையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து, Ye Mantram Vesave, நோட்டா, World Famous Lover, Dear Comrade, கீதா கோவிந்தம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

Vijay devarakonda nude poster for liger film getting viral on social media

தற்போது, சமந்தாவுடன் குஷி, பூஜா ஹெக்டேவுடன் Jana Gana Mana, Liger போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் Liger திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்து வருகிறார். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்பட்டு உள்ளது.

Vijay devarakonda nude poster for liger film getting viral on social media

இதுதவிர தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். லிகர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Vijay devarakonda nude poster for liger film getting viral on social media

இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Vijay devarakonda nude poster for liger film getting viral on social media

அதில் நடிகர் விஜய் தேவரகொண்டா கையில் ரோஜா பூங்கொத்துடன் நிர்வாணமாக நிற்கும் படியான போட்டோ இடம்பெற்றுள்ளது. இதைப்பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Vijay devarakonda nude poster for liger film getting viral on social media

Share this post