காருக்குள் மூன்று பேரா.. அந்தரங்க கேள்விக்கு அசால்டாக பதிலளித்த விஜய் தேவரகொண்டா.. வெளியான ப்ரோமோ !

சின்னத்திரை சீரியல் இயக்குனராக தனது கலை பயணத்தை தொடங்கிய விஜய் தேவரக்கொண்டா, Nuvvila என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். Life is Beautiful, Yevade Subramanyam போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.
பின்னர், Pelli Choopulu என்னும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் பெரும் பிரபலம் அடைந்தார். இப்படத்திற்காக பல விருதுகளையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து, Ye Mantram Vesave, நோட்டா, World Famous Lover, Dear Comrade, கீதா கோவிந்தம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
தற்போது, சமந்தாவுடன் குஷி, பூஜா ஹெக்டேவுடன் Jana Gana Mana, Liger போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் Liger திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்து வருகிறார். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். லிகர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே கலந்து கொண்ட காபி வித் கரண் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. பாலிவுட்டில் பிரபல இயக்குனராக இருக்கும் கரண் ஜோகர் நடத்தும் பிரபலமான காபி வித் கரண் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். சமீபத்தில் சமந்தா, அக்ஷய் குமார் கலந்து கொண்ட ப்ரோமோக்களும் வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.
இந்நிகழ்ச்சியின் 7வது சீசனில், விஜய் தேவரக்கொண்டா மற்றும் அனன்யா பாண்டே கலந்து கொண்டுள்ளனர். கரண் ஜோஹரின் அந்த ப்ரோமோவில், கடைசியாக எப்போது உடலுறவு கொண்டீர்கள் என விஜய் தேவரகொண்டாவிடம் கரண் கேட்டதற்கு, ‘இது வேண்டாம்’ என கூறியுள்ளார். இறுதியில் கார் என நாயகன் கேட்டதற்கு, அதற்கு காருக்குள் மூவருமா கேள்வி எழுப்பியுள்ளார் கரண். இந்த வீடியோ காபி வித் கரண் நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
Serious question - do you like 🧀? Then you'll love Episode 4 of #HotstarSpecials #KoffeeWithKaranS7, streams from this Thursday only on Disney+ Hotstar.@DisneyPlusHS @TheDeverakonda @ananyapandayy @apoorvamehta18 @jahnvio @aneeshabaig @Dharmatic_ pic.twitter.com/omxqi1NyBO
— Karan Johar (@karanjohar) July 26, 2022