ராஷ்மிகாவுடன் விஜய் தேவரகொண்டா காதல்.. Koffee with karan நிகழ்ச்சியில் உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை

Vijay devarakonda and rashmika are in love together said by popular actress

சின்னத்திரை சீரியல் இயக்குனராக தனது கலை பயணத்தை தொடங்கிய விஜய் தேவரக்கொண்டா, Nuvvila என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். Life is Beautiful, Yevade Subramanyam போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.

Vijay devarakonda and rashmika are in love together said by popular actress

பின்னர், Pelli Choopulu என்னும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் பெரும் பிரபலம் அடைந்தார். இப்படத்திற்காக பல விருதுகளையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து, Ye Mantram Vesave, நோட்டா, World Famous Lover, Dear Comrade, கீதா கோவிந்தம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

Vijay devarakonda and rashmika are in love together said by popular actress

தற்போது, சமந்தாவுடன் குஷி, பூஜா ஹெக்டேவுடன் Jana Gana Mana, Liger போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் Liger திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்து வருகிறார். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்பட்டு உள்ளது.

Vijay devarakonda and rashmika are in love together said by popular actress

இதுதவிர தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். லிகர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Vijay devarakonda and rashmika are in love together said by popular actress

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே கலந்து கொண்ட காபி வித் கரண் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. பாலிவுட்டில் பிரபல இயக்குனராக இருக்கும் கரண் ஜோகர் நடத்தும் பிரபலமான காபி வித் கரண் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். சமீபத்தில் சமந்தா, அக்ஷய் குமார் கலந்து கொண்ட ப்ரோமோக்களும் வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.

Vijay devarakonda and rashmika are in love together said by popular actress

இந்நிகழ்ச்சியின் 7வது சீசனில், விஜய் தேவரக்கொண்டா மற்றும் அனன்யா பாண்டே கலந்து கொண்டுள்ளனர். கரண் ஜோஹர் இதில் பல சுவாரஸ்யமான கேள்விகளை முன் வைத்துள்ளார். இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் டேட்டிங்கில் இருப்பதாக, ‘லிகர்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை அனன்யா பாண்டே இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Vijay devarakonda and rashmika are in love together said by popular actress

இவர்கள் காதல் குறித்த வதந்தி நீண்டகாலமாக இருந்து கொண்டிருக்கும் நிலையில், அதனை இருவருமே தொடர்ந்து நிராகரித்து வந்தனர். தற்போது அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையேயான தொடர்பை மறைமுகமாக சுட்டி காட்டியுள்ளார். விஜய் தேவரகொண்டா யாருடன் டேட்டிங் செய்கிறார் என்று அனன்யாவிடம் கரண் ஜோஹர் கேள்வி எழுப்பியபோது, ​​​​அவர் மறைமுகமாக ராஷ்மிகா மந்தனாவை பற்றி போட்டுடைத்துள்ளார்.

Vijay devarakonda and rashmika are in love together said by popular actress

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்த போது, அவர்களது காதல் காட்சிகள் மற்றும் லவ் கெமிஸ்ட்ரி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதுவே இவர்கள் காதல் வதந்தியை சிக்க காரணமாகவும் இருந்தது.

Vijay devarakonda and rashmika are in love together said by popular actress

இருவரும் ‘நண்பர்கள்’ என சொல்லிக்கொண்டாலும், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இருவரும் சுற்றுலாவிற்கு ஒரே இடங்களுக்கு சென்று வந்தனர். தற்போது இந்த வதந்தியை உறுதி செய்யும் விதமாக அனன்யா பாண்டே, மறைமுகமாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுடன் டேட் செய்து கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். இந்த தகவல் தற்போது டோலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Vijay devarakonda and rashmika are in love together said by popular actress

Share this post