காட்டுத்தீ போல பரவும் தகவல்.. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் விஜய், அஜித்.. Waiting'ஏ வெறி ஆகுதே !

Vijay and ajith in same shooting spot ramoji rav film city hyderabad

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான வலிமை இரண்டு திரைப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதனால் இவர்களது அடுத்த திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Vijay and ajith in same shooting spot ramoji rav film city hyderabad

விஜய் அடுத்து நடிக்கும் தளபதி66 படத்தை தோழா படத்தை இயக்கிய வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசை அமைக்கிறார்.

Vijay and ajith in same shooting spot ramoji rav film city hyderabad

ஃபேமிலி சென்டிமென்ட்டை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் சென்னையில் நடந்தது. இப்படத்தில், சரத்குமார், ஷாம் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் அடுத்த ஷெட்யூல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட செட்டில் நடைபெறவுள்ளது.

Vijay and ajith in same shooting spot ramoji rav film city hyderabad

இதற்காக நடிகர் விஜய் ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Vijay and ajith in same shooting spot ramoji rav film city hyderabad

இதற்கிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் AK61 படத்தின் ஷூட்டிங் அங்கு நடந்து வருகிறது. இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்துக்காகவும் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில், பிரம்மாண்ட வங்கி செட்டும், சென்னை மவுண்ட் ரோடு செட்டும் அமைக்கப்பட்டுள்ளது.

Vijay and ajith in same shooting spot ramoji rav film city hyderabad

இரண்டு முன்னணி நடிகர்களின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடப்பதால் அவர்கள் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும், புகைப்படம் வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.

Share this post