குடும்பத்துடன் விஜய் - அஜித் ரகசிய சந்திப்பு ? பிரபலத்தின் பேட்டி வைரல் !

Vijay and ajith family meets together information getting viral on social media

எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் தொடர்ந்து விஜய் - அஜித் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் திரைப்படம் குறித்த அறிவிப்பு வந்தாலே, சமூக வலைத்தளங்கள் தொடங்கி திரையரங்குகள் வரை கொண்டாட்டமாக மாறிவிடும்.

Vijay and ajith family meets together information getting viral on social media

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான விஜய், அஜித் படங்கள் வெளியாகும் போது, இருதரப்பு ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள் என்பது தெரிந்ததே.

Vijay and ajith family meets together information getting viral on social media

அதே நேரத்தில் விஜய், அஜித் இருவரும் நட்புடன் இருக்கிறார்கள் என்றும், சென்னையில் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள் என்றும் குறிப்பாக இருவரும் பிறந்த நாளின் போது தங்களது வாழ்த்துக்களை நேரில் தெரிவித்து கொள்வார்கள் என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

Vijay and ajith family meets together information getting viral on social media

இந்நிலையில், தற்போது பிரபல இசையமைப்பாளரும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் சமீபத்திய பேட்டியில், ‘அஜித், விஜய் ஆகிய இருவரும் அவ்வப்போது குடும்பத்துடன் துபாயில் சந்தித்து கொள்வார்கள் என்றும் அந்த சந்திப்பின்போது சிலநேரம் எங்களுடைய குடும்பமும் இருந்திருக்கிறது’ என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அஜித், விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Vijay and ajith family meets together information getting viral on social media

மேலும் விஜய், அஜித் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் கதையை வெங்கட்பிரபு எழுதி வருவதாகவும் விரைவில் பிரமாண்டமான அறிவிப்பு வெளியாகும் என்றும் கங்கை அமரன் தெரிவித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share this post