விக்னேஷ் சிவன் - அஜித் கூட்டணியில் AK62 ? ஜோடியாக நயன்.. இசையமைக்கும் அனிருத்.. வெளியான தகவல் !

Vignesh shivan to direct ak62 and nayan to play lead role anirudh as music director

எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகி தியேட்டர்களில் வெற்றி நடைபோட்டு வரும் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து, அஜித்தின் 61-வது படத்தையும் எச். வினோத் இயக்கவிருப்பதாகவும் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இப்படத்தில் மோகன் லால் அல்லது நாகார்ஜூனா இருவரில் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும், பாலிவுட் நட்சத்திரங்களும் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், தற்போது அஜித்குமாரின் 62வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க, நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை முடித்துள்ள விக்னேஷ் சிவன், அஜித்குமாரின் அடுத்த படத்தின் பணிகளை தொடங்கி விட்டதாகவும், இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vignesh shivan to direct ak62 and nayan to play lead role anirudh as music director

Share this post