என் காதல்.. என் பேபி.. உடன் இருக்கும் கடைசி 5 நாள்.. Little painful என எமோஷனலாக பதிவிட்ட விக்னேஷ் சிவன்

Vignesh shivan shares painful post on last 3 days working for kaathuvaakula rendu kadhal movie

போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலம் ஆனவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா போன்ற 3 முக்கிய நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து முக்கோண காதல் கதை வடிவில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Vignesh shivan shares painful post on last 3 days working for kaathuvaakula rendu kadhal movie

இப்படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 28ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. மேலும், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Vignesh shivan shares painful post on last 3 days working for kaathuvaakula rendu kadhal movie

இந்நிலையில், அனிருத் உடன் இசைக் கோர்ப்பு பணியில் ஈடுபட்டபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இப்படம் குறித்த அனுபவத்தை பற்றி இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Vignesh shivan shares painful post on last 3 days working for kaathuvaakula rendu kadhal movie

என் காதல் என் குழந்தை ‘’காத்துவாக்குல ரெண்டு காதல்’ உடன் இருக்கும் கடைசி 5 நாள். நிறைய அன்போடும், அரவணைப்போடும் இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். பிரியப்போகிற வலி ஆரம்பித்துவிட்டாலும் அந்த வலி மதிப்புமிக்கது. ஏனெனில் வலி இல்லாமல் எந்த காதலும் இல்லை” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Vignesh shivan shares painful post on last 3 days working for kaathuvaakula rendu kadhal movie

Share this post