'எனக்கு நீயும் வேணும்.. நீயும் வேணும்..' சமந்தா-நயன் நடுவே திணறும் விஜய் சேதுபதி.. விக்னேஷ் சிவன் பதிவிட்ட வீடியோ!

Vignesh shivan shares his favourite scene from kaathuvaakula rendu kadhal movie

போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் திரைப்படத்தின் போது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலில் விழவே, தற்போது 7 வருடங்கள் கடந்து இவர்கள் காதல் கதை நீடித்து வருகிறது.

Vignesh shivan shares his favourite scene from kaathuvaakula rendu kadhal movie

இவர்களது ரவுடி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, பிரபு மற்றும் பலர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படம் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

Vignesh shivan shares his favourite scene from kaathuvaakula rendu kadhal movie

பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்,விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய் சேதுபதி திரையரங்குகளில் விசிட் செய்தனர். சமந்தா மட்டும் வேறு படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் அவர் இந்த படத்தின் எந்த கொண்டாடத்திலும் கலந்துகொள்ளவில்லை.

Vignesh shivan shares his favourite scene from kaathuvaakula rendu kadhal movie

இப்படத்தில் விஜய் சேதுபதியின் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் விதத்தில் இருந்தது. முக்கியமாக, நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஒன்று சேரும் காட்சிகள் சிரிப்பு மழை தான்.

Vignesh shivan shares his favourite scene from kaathuvaakula rendu kadhal movie

அப்படி, விக்னேஷ் சிவன், தனக்கு பிடித்தமான சீன் என கூறி ஒரு வீடியோ ஷேர் செய்துள்ளார்.

Share this post