செஸ் ஒலிம்பியாட்.. 'எஞ்சாய் எஞ்சாமி' பாடகர் அறிவு குறித்த சர்ச்சை: விக்னேஷ் சிவன் அளித்த விளக்கம் !

Vignesh shivan says about issue on enjoy enjaami in chess olympiad

கடந்த 2021ம் ஆண்டு வெளியான என்ஜாய் எஞ்சாமி பாடல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனது. இப்பாடலை பாடகி தீ மற்றும் பாடகர் அறிவு இணைந்து பாடி, நடித்து இந்த ஆல்பம் பாடலை வெளியிட்டனர். இதனை சந்தோஷ் நாராயணன் தயாரித்துள்ளார்.

Vignesh shivan says about issue on enjoy enjaami in chess olympiad

இப்பாடல், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற 44வது ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் ஏ ஆர் ரகுமானின் ஆந்தம் பாடலுடன் என்ஜாய் என்ஜாமி பாடலும் பாடப்பட்டது. அதனை பாடகிகள் தீயும், கிடாக்குழி மாரியம்மாளும் பாடினர். ஆனால் இந்த டீமில் அறிவு இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அது குறித்தான வினாக்களும் சமூக வலைதளத்தில் உலா வந்தது.

Vignesh shivan says about issue on enjoy enjaami in chess olympiad

இதுகுறித்து சந்தோஷ் நாராயணன் விளக்கம் அளித்திருந்தார். அதில், அவர் வேறு ஒரு பணிக்காக வெளிநாட்டுக்கு சென்றதாக கூறியிருந்தார். இவரைத் தொடர்ந்து, பாடகர் அறிவு மற்றும் பாடகி தீ விளக்கம் கொடுத்து பதிவை வெளியிட்டிருந்தனர்.

Vignesh shivan says about issue on enjoy enjaami in chess olympiad

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை வழிநடத்திய இயக்குனர் விக்னேஷ் சிவன் இது குறித்து கூறியிருப்பதாவது, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க ஒன்றுக்கு பலமுறை அறிவை அழைத்தோம். ஆனால், அவர் வெளிநாட்டில் இருந்ததால் அதில் பங்கேற்க முடியாது என்றார். எனினும், நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் வெளிநாடு திரும்புவதற்கு கூட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யத் தயார் என்றே கூறினோம். ஆனால், அவரால் வர முடியவில்லை.

Vignesh shivan says about issue on enjoy enjaami in chess olympiad

நான் அறிவின் ரசிகன். அவர் திறமைசாலி. ஆகவே, அப்பாடலில் அறிவு இடத்தில் நாங்கள் யாரையும் மாற்றாக பயன்படுத்தவில்லை. எங்கள் நிகழ்ச்சி தயாரிப்பு குழுவுக்கும், அறிவுக்கும் எந்த கருத்தியல் வேறுபாடும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

Share this post