வா நண்பா வா.. கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கு - நெல்சனுக்காக விக்னேஷ் சிவன் போட்ட ட்விட் !

Vignesh shivan posts for nelson dilipkumar for his rajinikanth jailer movie

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘தலைவர்169’. சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

Vignesh shivan posts for nelson dilipkumar for his rajinikanth jailer movie

தொடர் வெற்றி படங்களைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் தலைவர்169 இவர் இயக்கமாட்டார் என தகவல் பரவி வந்த நிலையில், ரஜினி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர்169 பட போஸ்டரை பதிவிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Vignesh shivan posts for nelson dilipkumar for his rajinikanth jailer movie

தலைவர் 169 படம் இந்த ஆண்டு தீபாளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷுட்டிங்கே ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தான் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Vignesh shivan posts for nelson dilipkumar for his rajinikanth jailer movie

இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட் தகவலாக, தலைவர்169 படத்தில் ரஜினிக்கு வில்லனாக கன்னட மெகா ஸ்டார் சிவ ராஜ்குமார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பதாக அப்டேட்கள் வெளியானது.

Vignesh shivan posts for nelson dilipkumar for his rajinikanth jailer movie

இதுவரை பாலிவுட், டோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகர்களை தமிழ் படங்களில் வில்லனாக நடிக்க வைத்து வந்தனர். கேஜிஎஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, கன்னட திரையுலகின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது என சொல்லப்படுகிறது.

Vignesh shivan posts for nelson dilipkumar for his rajinikanth jailer movie

படத்தின் டைட்டில் மற்றும் கதைக்களம் குறித்து தகவல் வெளியானது. அதன்படி, தலைவர்169 படம் சிறை மற்றும் சிறைக்கைதிகள் சம்பந்தப்பட்ட கதை எனவும், இப்படத்திற்கு ஜெயிலர் என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இப்படம் குறித்த மேலும் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Vignesh shivan posts for nelson dilipkumar for his rajinikanth jailer movie

ரஜினியின் தீவிர ரசிகனான சிவகார்த்திகேயன் தற்போது ரஜினி படத்தில் அவரின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கிளப்பியது.

Vignesh shivan posts for nelson dilipkumar for his rajinikanth jailer movie

தலைவர் 169 படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டு உள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சிறையில் தான் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vignesh shivan posts for nelson dilipkumar for his rajinikanth jailer movie

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய், முக்கியமான ரோலில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க போவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக நடித்து மாஸ் காட்டி இருந்த ரம்யா கிருஷ்ணன், தற்போது அவருக்கு ஜோடியாக நடிப்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

Vignesh shivan posts for nelson dilipkumar for his rajinikanth jailer movie

விக்ரம் பட வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் அவர்களை உயர்த்தியும், நெல்சன் திலீப்குமார் அவர்களை ட்ரோல் மற்றும் மீம்ஸ் மூலம் கலாய்த்தும் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர். இதற்கு லோகேஷ் கனகராஜ் மற்றும் சில திரையுலக பிரபலங்கள் நெல்சன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் நெல்சனுக்கு ஆதரவாக ட்விட் ஒன்றை போட்டுள்ளார். நேற்று வெளியான நெல்சனின் அடுத்த படமான ரஜினியின் ஜெயிலர் பட போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘வா.. நண்பா.. வா, தலைவரோட பெஸ்ட் படமா இது இருக்கும். அனிருத்தோடு சேர்ந்து கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி கலக்கு” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த ட்விட் வைரலாகி வருகிறது.

Vignesh shivan posts for nelson dilipkumar for his rajinikanth jailer movie

Share this post