நீயா நானா 'அப்பா' பற்றி பதிவிட்ட விக்னேஷ் சிவன்.. வைரலாகும் வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியும் ஒன்று. அந்த வகையில், கடந்த வாரம் ஒளிபரப்பான, ‘அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் vs கணவர்கள்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் விவாதம் நடந்த போது ஒரு பெண் அவரது கணவர் படிப்பறிவில்லாதவர். மகளின் மார்க் ரிப்போர்ட்டை வாங்கி ஒரு மணி நேரம் பார்த்துக்கொண்டிருப்பார். அந்த காலத்து ஆள் போலவே இருக்கிறார். இன்னும் கரெண்ட் ட்ரெண்டுக்கு வரவில்லை என எல்லோர் முன்னிலையில் கூறினார்.
அதற்கு கோபிநாத், இதை பற்றி அவரிடம் கேட்கவே, நான் வாங்காத மார்க்கை என் மகள் பெறுகிறாள் என்பதை தான் அப்படி ஆனந்தத்துடன் பாத்துக்கொண்டிருப்பேன் என அந்த அப்பா கூற, கோபிநாத் உடனே அவருக்கு பரிசு கொடுத்திருந்தார்.
இதில் பங்கேற்ற கணவன் மற்றும் மனைவி கடந்த சில தினங்களாக இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றனர். முக்கியமாக அவர்கள் அந்நிகழ்ச்சியில் பேசிய வீடியோ செம வைரலாகி வருகிறது.
தற்போது நெட்டிசன்கள் அந்த அப்பாவை ஹீரோவாக கொண்டாடிவருகிறார்கள், மறுபுறம் அவரது மனைவியை வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும், இந்த நிகழ்வு குறித்து பல பிரபலங்களும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த நிகழ்வு பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அப்பா தோற்கவில்லை என மகள் கூறியதும், அவருக்கு அப்பா முத்தம் கொடுப்பார். அதை குறிப்பிட்டு, “மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று” என அவர் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.