AK62 வில் அஜித் வில்லனாக விஜய் சேதுபதியா? பேட்டியில் ஓப்பனாக பதிலளித்த விக்னேஷ் சிவன் !

Vignesh shivan opens up about rumours on vijay sethupathi as villan in ak62

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களின் வரிசையில் திகழ்ந்து வருபவர் நடிகை விஜய் சேதுபதி. எந்த மாதிரியான கதாபாத்திரம் மற்றும் கதை என்றாலும் ஏற்று நடிக்கும் திறமை கொண்டவர். வெற்றி தோல்வி பற்றி கருதாது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இதனால், இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உள்ளனர்.

Vignesh shivan opens up about rumours on vijay sethupathi as villan in ak62

பிற நடிகர்கள் இருக்கும் படத்தில் நடிக்க யோசிக்கும் நடிகர்களுக்கு நடுவே, வில்லனாகவும் அவதாரம் எடுத்துள்ளார். விக்ரம் வேதா, மாஸ்டர் போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

Vignesh shivan opens up about rumours on vijay sethupathi as villan in ak62

இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் AK62 திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி களமிறங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

Vignesh shivan opens up about rumours on vijay sethupathi as villan in ak62

அதற்கு விஜய் சேதுபதி, நானும் இந்த கேள்வியை விக்னேஷ் சிவனிடம் கேட்டேன். அதற்கு விக்னேஷ் சிவன் ‘ என் ஹீரோவை நான் வில்லனாக பார்க்க மாட்டேன் ‘ என கூறிவிட்டாராம். இதன்மூலம், AK 62 படத்தில் அஜித்துக்கு வில்லன் விஜய் சேதுபதி நடிக்க மாட்டார் என உறுதியாகியுள்ளது.

Share this post