நயன்தாராவின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் அறிவிப்பு.. வைரலாகும் விக்னேஷ் சிவன் பதிவு!
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, டபுள் ட்ரீட்டாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை விக்கி - நயன் தம்பதி பெற்றெடுத்தனர். சரியாக விதிமுறையை கடைபிடிக்கவில்லை என்று சர்ச்சை எழவே, தாங்கள் 2016ம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், 2021ம் ஆண்டு வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் வேலையை தொடங்கியதாகவும் சாட்சிகளை விசாரணையில் சமர்ப்பித்தனர்.
தற்போது, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரும் 18ம் தேதி தனது 38வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில், நயந்தாரா கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் அவரது பிறந்தநாள் சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். நயன்தாராவின் பிறந்த நாள் அன்று, அவர் நடித்து வரும் ‘கனெக்ட்’ என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தின் புதிய போஸ்டரை அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் மற்றும் சத்யராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Connect Teaser from #November18th #LadySuperStar #Nayanthara birthday special ⭐️😇 @AnupamPKher #Sathyaraj #Vinay
— Vignesh Shivan (@VigneshShivN) November 15, 2022
Your best work dear @Ashwin_saravana 😇👌✅
A proud @Rowdy_Pictures product 😊😇
Praying for all your love & Support as always ⭐️😇 pic.twitter.com/udIeCm3lFQ