கௌதம் - மஞ்சிமா திருமணம்.. வாழ்த்தி கிப்ட் அனுப்பிய நயன் & விக்கி.. வைரல் போட்டோ!
பிரபல நடிகர் கார்த்திக் அவர்களின் மகன் கவுதம் கார்த்திக், கடல் என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படம் செம ஹிட் ஆனது.
மேலும், ஹர ஹர மஹாதேவகி, இந்திரஜித், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது 2 படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில், தேவராட்டம் என்னும் படத்தில் மஞ்சிமா மோகன் அவர்களுடன் ஜோடியாக நடித்தார்.
ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், இப்படை வெல்லும், காலத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ’தேவராட்டம்’ படத்தில் நடித்த போது கெளதம், மஞ்சிமா மோகன் இருவரும் காதலிக்க ஆரம்பித்ததாகவும் இந்த காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதித்த நிலையில் விரைவில் அதிகாரபூர்வ திருமண தேதி வெளியாகும் என செய்திகள் கடந்த சில மாதங்களாகவே வெளியாகி தீயாக பரவி வந்தது.
இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசு வெளியாகி வந்த போதிலும், இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த தகவலை மறுத்து வந்த மஞ்சிமா மோகன், கடந்த மாதம் தங்களது ரொமான்டிக் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு தங்கள் காதலையும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பத்தையும் உறுதி செய்தனர்.
இதைதொடர்ந்து, நவம்பர் 28ம் தேதி சென்னையில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் முன்னிலையில் மஞ்சிமா மோகன் - கௌதம் கார்த்திக் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகின. இதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இவர்கள் திருமணத்தில் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். அதன் புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இணைந்து மணமக்கள் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகனுக்கு வாழ்த்து கூறி கேக் ஒன்றை பரிசளித்துள்ளனர். அந்த வாழ்த்து செய்தியில், “வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் இருக்க வாழ்த்துகள்” என கூறியுள்ளனர்.