AK62 முன்பே.. நயன் - விக்கி டும் டும் டும்..? தேதியும் குறிச்சாச்சா..? விரைவில் வெளியாக போகும் அறிவிப்பு !

Vignesh shivan and nayanthara to get married in june month rumours spread in social media

போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இதையடுத்து 2015ம் ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் இவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

Vignesh shivan and nayanthara to get married in june month rumours spread in social media

இவர்கள் இருவருக்கும் நிச்சயம் ஆகிவிட்டது என்றதும், அவர்கள் மோதிரம் மாத்தியது குறித்தும் நயன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். விரைவில் திருமணம் நடக்கப்போவதாக அவ்வப்போது சமூக தலைத்தளங்களில் தகவல் வெளியாகி வந்தது.

Vignesh shivan and nayanthara to get married in june month rumours spread in social media

தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஆகியோர் நடிப்பில் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் சில கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

Vignesh shivan and nayanthara to get married in june month rumours spread in social media

அதன் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆனது. அதில், நயன்தாரா நெற்றியில் குங்குமத்துடன் இருப்பதை போன்று புகைப்படம் வெளியாகி இருவரும் திருமணம் செய்துக்கொண்டதாக பேசப்பட்டது.

Vignesh shivan and nayanthara to get married in june month rumours spread in social media

இந்நிலையில், தற்போது அவர்களின் திருமணம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் வெளியானவுடன், வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் இவர்களின் திருமணம் நடைப்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.

Share this post