நயன் - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ரிலீஸ் எப்போது தெரியுமா? - வெளியான அப்டேட்

vignesh shivan and nayanthara marriage video to get released on march or april

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

vignesh shivan and nayanthara marriage video to get released on march or april

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

vignesh shivan and nayanthara marriage video to get released on march or april

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

vignesh shivan and nayanthara marriage video to get released on march or april

மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, டபுள் ட்ரீட்டாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை விக்கி - நயன் தம்பதி பெற்றெடுத்தனர்.

vignesh shivan and nayanthara marriage video to get released on march or april

இதனை தொடர்ந்து, நயன்தாரா நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் பெரிய அளவில் பிரமாண்டமாக இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு நடைபெற்றது. திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் பெற்றது. அதன் ப்ரோமோவும் சென்ற வருடமே வெளியானது.

vignesh shivan and nayanthara marriage video to get released on march or april

ஆனால் முழு வீடியோ தற்போது வரை ரிலீஸ் ஆகவில்லை. தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி விக்னேஷ் சிவன் தான் அந்த திருமண டாக்குமெண்டரியை இயக்கி வருகிறாராம். அதன் ஷூட்டிங் முடியாத காரணத்தினால் தான் வீடியோவை நெட்பிலிக்ஸ் வெளியிட தாமதம் ஆகி வருகிறது. இந்த வருடம் ஜனவரி 23ம் தேதி வரை ஷூட்டிங் நடந்திருக்கிறது, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடைய இன்னும் ஒரு மாதம் ஆகலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

vignesh shivan and nayanthara marriage video to get released on march or april

வரும் மார்ச் அல்லது ஏப்ரலில் விக்கி - நயன் திருமண வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க விக்னேஷ் சிவன் அடுத்து இயக்க இருந்த அஜித்62 படத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this post