நடுக்காட்டில் ரத்தம் உறிஞ்சும் அட்டை.. விலங்குகள் நடுவே சிக்கி தவிக்கும் படக்குழு.. வெளியான தகவல் !

Viduthalai team crew struck between forest area during shooting

ஆர் எஸ் இன்போடெய்ன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படம் விடுதலை. இத்திரைக்கதை பிரபல எழுத்தாளர் ஜெய மோகன் அவர்களின் துணைவன் என்னும் சிறுகதையில் இருந்து எடுக்கப்பட்டது.

Viduthalai team crew struck between forest area during shooting

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Viduthalai team crew struck between forest area during shooting

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஷூட்டிங் எடுக்கப்பட்ட இப்படம் திண்டுக்கல், சத்தியமங்கலம் வனப்பகுதி போன்றவற்றில் எடுக்கப்பட்டுள்ளது.

Viduthalai team crew struck between forest area during shooting

விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் நடிக்கும் நடுவிலே இப்படத்தில் கலந்து கொண்டுள்ளார் விஜய் சேதுபதி. அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘விசாரணை’ படம் போலவே வித்தியாசமாக இப்படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

Viduthalai team crew struck between forest area during shooting

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. தற்போது விடுதலை படப்பிடிப்பு தளத்திலிருந்து சில புகைப்படங்களை விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். அந்த நான்கு புகைப்படங்களில், சூரி, வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதியின் காட்சிகள் உள்ளன.

Viduthalai team crew struck between forest area during shooting

மலைவாழ் மக்கள் மற்றும் காவல்துறைக்கு இடையேயான பிரச்சனை குறித்த மைய கருவை கொண்டு இப்படம் உருவாவதாக சொல்லப்படுகிறது. இதில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Viduthalai team crew struck between forest area during shooting

பல முறை ஒத்தி வைக்கப்பட்ட விடுதலை திரைப்படத்தின் ஷூட்டிங், தற்போது இறுதி படப்பிடிப்பை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் ரிலீஸ் குறித்த எந்த தகவலும் இதுவரை இல்லை.

Viduthalai team crew struck between forest area during shooting

மலைவாழ் மக்கள் தொடர்பான கதை என்பதால் திண்டுக்கல் சிறுமலை அருகே அடர்ந்த காட்டிற்குள் மிகப்பெரிய கிராமம் போன்ற செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது.

Viduthalai team crew struck between forest area during shooting

இதில் 200க்கும் மேற்பட்ட சினிமா ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாக சொல்லப்படுகிறது. பொதுவாக இதுபோன்ற காட்டு பகுதிகளில் விஷ ஜந்துக்கள் அதிகம் இருக்கும். அங்கே படப்பிடிப்பு நடைபெறும் பட்சத்தில் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

Viduthalai team crew struck between forest area during shooting

ஆனால் கிட்டத்தட்ட 1 மாதத்திற்கு மேலாக நடைபெறும் ‘விடுதலை’ படப்பிடிப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவி கூட போதுமான அளவுக்கு இல்லை என கூறப்படுகிறது. ரத்தம் உறிஞ்சும் அட்டை, விலங்கு உன்னி போன்ற பூச்சி கடிகளுக்கு இடையே படக்குழு தவிப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this post