சீமான் சொன்னது பொய்யா..? 'அசுரன்' பட பாடல் சர்ச்சை குறித்து வெற்றிமாறன் போட்டுடைத்த உண்மை..!
தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் நடிகை வெற்றிமாறன். தனது ஒவ்வொரு படத்திலும் மிக கவனம் செலுத்தி இவர் எடுப்பதை பார்த்து நிறைய சினிமா தொழில் நுட்ப துறையினரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
இவர் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றி படமாக அமைந்து, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தது. அதனைத் தொடர்ந்து, ஆடுகளம் மற்றும் வடசென்னை போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் திரைப்படங்களாக அமைந்தது.
முதல் படம் முதலே வெற்றி தர தொடங்கிய இந்த கூட்டணி, பொல்லாதவன் தொடங்கி அசுரன் வரை மெகா ஹிட் திரைப்படங்களை தந்து வருகிறது. இதனால் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணையும் திரைப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. வடசென்னை பாகம் 2 உருவாகி வரும் நிலையில், அதன் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
தற்போது தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களை கொண்டு வலம் வரும் இவர் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் பெரும் வெற்றி அடைந்தது. அதிலும், இப்படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், வெற்றிமாறனின் அசுரன் படத்தில் இடம்பெற்ற எள்ளுவய பூக்களையே பாடலை முதலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாடியதை கேட்டு தான் படத்தில் அந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டாக பரவலாக தகவல் பேசப்பட்டு வந்தது.
இதனை சீமான் ஒரு நேர்காணலில் பகிர்ந்து அந்தப் பாடலின் மெட்டையும் பாடிக்காட்டினார். சீமான் பொய் கூறுவதாக ஒரு சிலர் சர்ச்சையாக்கினர். இது குறித்து பேட்டியொன்றில் வெற்றிமாறனிடம் கேட்க்கப்பட்டபோது, அசுரன் பாடல்கள் குறித்து நானும் ஜி.வி.பிரகாஷும் பேசியபோது நாட்டுப்புற பாடல்கள் வடிவில் இந்தப் படத்தின் பாடல்கள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
அப்போது, ஒரு கல்லூரி விழாவில் சீமான் பாடிய பாடலைநான் கேட்டேன். உடனே அந்தப் பாடலை ஜி.வி.பிரகாஷிடம் கேட்க சொன்னேன். அவருக்கும் பிடித்துப்போகவே, நானும் ஜி.வி.பிரகாஷும் சீமானை சந்தித்தோம். அவர் தன் பாட்டி பாடிய பாடல்தான் என்றார். பின்னர் சீமான் பாடிய டியூன் வைத்து ஜீ.வி.பிரகாஷ் குமார் அந்தப் பாடலை உருவாக்கினார் என்றார்.
அவதூறு பரப்பிய சல்லி நாய்கள் இப்ப இதற்கு என்ன சொல்ல போகிறது .@ThamizhVishan pic.twitter.com/vmPx4C9hwS
— Duraimurugan (@Saattaidurai) March 10, 2023