இந்த பிரபல படத்தின் காப்பியா 'பொல்லாதவன்'.. வெற்றிமாறனின் பதில் இதோ..

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் நடிகை வெற்றிமாறன். தனது ஒவ்வொரு படத்திலும் மிக கவனம் செலுத்தி இவர் எடுப்பதை பார்த்து நிறைய சினிமா தொழில் நுட்ப துறையினரும் ஆச்சர்யமடைந்துள்ளனர். இவர் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றி படமாக அமைந்து, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தது.
அதனைத் தொடர்ந்து, ஆடுகளம் மற்றும் வடசென்னை போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் திரைப்படங்களாக அமைந்தது. முதல் படம் முதலே வெற்றி தர தொடங்கிய இந்த கூட்டணி, பொல்லாதவன் தொடங்கி அசுரன் வரை மெகா ஹிட் திரைப்படங்களை தந்து வருகிறது. இதனால் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணையும் திரைப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. வடசென்னை பாகம் 2 உருவாகி வரும் நிலையில், அதன் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
தற்போது தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களை கொண்டு வலம் வரும் இவர் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் திரைப்படம் இன்று பலரது பேவரைட். 2007ம் ஆண்டு தனுஷ், திவ்யா, சந்தானம், கருணாஸ், டேனியல் பாலாஜி, கிஷோர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்தது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில், இப்படம் ஆங்கில படமான “Bicycle thieves” என்னும் படத்தின் காப்பி என கூறப்படுகிறது. இப்படம் வெளியான சமயம் பலரும் இதைப்பற்றி பேசிய நிலையில், இதுகுறித்த கேள்விக்கும் வதந்திக்கும் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.