'மீண்டும் வல்லவன் ஆக மாறி Romance'ல் குதித்த சிம்பு..' வெந்து தணிந்தது காடு பட பாடல் வீடியோ செம வைரல் !
டி ராஜேந்தர் அவர்களின் மகனான சிம்பு குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வருபவர். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், காதல் அழிவதில்லை, தம், அலை தொடங்கி நிறைய படங்களில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன், வானம் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.
சில பல பிரச்னைகளால் உடல் எடை கூடி ஆளே வித்தியாசமாக மாறிய சிம்பு, உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் செம பிட்டாக இருப்பதை பார்த்து பலரும் ரசித்தனர். அப்படம் பெரும் கம்பேக் ஆக அவருக்கு அமைந்தது. இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிம்பு, சின்னத்திரையிலும் பிரபலம் ஆனார்.
இந்நிலையில், விரைவில் சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகவுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேசன் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக சிந்து இதானி, மேலும், நடிகை ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குமார் கவுதம் மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். முதல் பாகம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ள நிலையில், அடுத்த பாகத்திற்கான ஷூட்டிங் தற்போது லக்னோவில் நடைபெற்று வருவதாக அவர் கூறி இருந்தார். முதல் பாகத்தில் சிம்பு சாதாரண இளைஞனாக இருந்து எப்படி கேங்ஸ்டர் ஆனார் என்பதை காட்ட உள்ளதாகவும், இரண்டாம் பாகத்தில் அவரின் கேங்ஸ்டர் வாழ்க்கை குறித்து காட்ட உள்ளதாகவும் கவுதம் மேனன் தெரிவித்திருந்தார்.
இப்படத்தின் ட்ரைலர் மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
நாளை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இப்படத்தில் உள்ள ‘உன்ன நினைச்சதும்’ பாடல் வீடியோ வெளியிட்டுள்ளது. இப்பாடலை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். ஸ்ரேயா கோஷல் ,சார்தக் கல்யாணி ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.
இதில் சிம்பு ரொமான்ஸ் காட்சிகளை பார்த்து மீண்டும் வல்லவன் ஆக மாறி ரொமான்ஸ் செய்கிறார் சிம்பு என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.