சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் வெந்து தணிந்தது காடு படத்தின் குட்டி அறிவிப்பு வீடியோ.. வெளியானது ரிலீஸ் தேதி !

டி ராஜேந்தர் அவர்களின் மகனான சிம்பு குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வருபவர். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், காதல் அழிவதில்லை, தம், அலை தொடங்கி நிறைய படங்களில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன், வானம் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.
சில பல பிரச்னைகளால் உடல் எடை கூடி ஆளே வித்தியாசமாக மாறிய சிம்பு, உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் செம பிட்டாக இருப்பதை பார்த்து பலரும் ரசித்தனர். அப்படம் பெரும் கம்பேக் ஆக அவருக்கு அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிம்பு, சின்னத்திரையிலும் பிரபலம் ஆனார் . தற்போது, இவர் நடித்து வந்த வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்திற்காக நடிகர் சிம்பு 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து வித்தியாசமான கெட் அப்பில் நடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டராக நடிக்கிறார். மேலும் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கி உள்ளார். இவர்கள் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக சிந்து இதானி, மேலும், நடிகை ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் சிம்பு அமெரிக்கா சென்றதால், இப்படத்தின் டப்பிங் பணிகள் தடைபட்டுள்ளது. அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் டப்பிங் பேசி முடிப்பார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். அன்றைய தினம் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படமும் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The Most Awaited Announcement !
— Vels Film International (@VelsFilmIntl) June 28, 2022
The Blockbuster combo @menongautham - @SilambarasanTR_'s #VendhuThanindhathuKaadu to get a grand release worldwide on Sept 15 2022.
🔗 https://t.co/UgdQ8d0QYr#VTKOnSep15th
An @arrahman Musical
Produced by @VelsFilmIntl Dr @IshariKGanesh