வெந்து தணிந்தது காடு - என்னதான் கதை.. இங்கு பார்க்கலாம் !
மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேசன் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக சிந்து இதானி, மேலும், நடிகை ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். முதல் பாகம் இன்று ரிலீசாகி உள்ள நிலையில், படம் இன்று அதிகாலை காட்சி முதல் திரையிடப்பட்டு வருகிறது.
வெந்து தணிந்தது காடு படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு வெளியான இந்த படத்திற்காக சிம்பு கடுமையாக உழைத்து உள்ளார் என கூறப்படுகிறது. தனது உடல் எடையை வெகுவாக குறைத்து சிம்புவின் Transformation ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இருபடங்களுக்கு பிறகு பல ஆண்டு இடைவெளியில் கௌதம் வாசுதேவ் மேனன் சிம்பு கூட்டணி இணைந்துள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் முதல் முறையாக கைகோர்த்துள்ளார்.
இந்த படம் முத்து என்கிற கதாநாயகனை சுற்றியே நகரும் கதைக்களத்தை கொண்டுள்ளது. நெல்லையிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளராக மும்பைக்கு செல்லும் முத்து அங்கு கேங்ஸ்டார்களிடம் மாட்டிக் கொண்டு அவர் சந்திக்கும் பிரச்சினைகளும் பின்னர் அனைத்தையும் எதிர்கொண்டு தானும் கேங்ஸ்டர் ஆக மாறும் கதைக்களத்தை முழுமையாக கொண்டுள்ளது இந்த படம்.
ஏற்கனவே சிம்பு தெரிவித்தபடி இதன் இடைவேளை மற்றும் இறுதி காட்சிகள் மாஸாக இருப்பதாகவும், படம் விறுவிறுப்பான கதைகளத்தை கொண்டுள்ளதாகவும் விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.
ஆனால் தனி மனிதனின் வாழ்க்கை கதையை சுற்றி கதை நகர்வதால் அதனுடன் ஒன்றிப்போவது கொஞ்சம் கஷ்டமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. செகண்ட் ஹாப் பக்காவான பேக்கேஜாக உருவாகியுள்ளதாகவும் ஆனாலும் சிம்புவின் வழக்கமான மாஸ் பஞ்ச் டயலாக் எல்லாம் இந்த படத்தில் கிடையாது என்றும் ரசிகர்கள் ஏக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.
#Atman @SilambarasanTR_ #VendhuThanindhadhuKaadu celebration start in @RohiniSilverScr #SilambarasanTR #simbu #STR #VTKFromSep15 #VTKFDFS #VTKFestival pic.twitter.com/Ws4BjQNpe1
— Dilli Babu (@DilliBa50764598) September 15, 2022
Intermission Mass#Vendhuthaninthadhukaadu#VTKFDFS#VTKREVIEW#SilambarasanTR#VenthuThanindhathuKaadu pic.twitter.com/E6aosHbnaD
— Loud speaker (@Jaga2e) September 15, 2022