விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் - அஜித் நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்தின் அறிவிப்பு !

சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் வெங்கட் பிரபு. கங்கை அமரன் அவர்களின் மகனாக இருந்தாலும் தனது கடின உழைப்பினால், திரையுலகில் தற்போது தனக்கென்ற இடத்தை உருவாக்கியுள்ளார். சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், முதல் படமே தாறுமாறாக ஹிட் அடித்தது.
அப்படத்தை தொடர்ந்து, சரோஜா, கோவா, மங்காத்தா போன்ற அடுத்தடுத்த வெற்றி படங்களை தந்தார். அதிலும், அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் செம ஹிட் ஆகி ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடினர். அதன் பின்னர், பிரியாணி மற்றும் மாஸ் திரைப்படங்கள் அவ்வளவாக ஓடவில்லை.
சென்னை 600028 2, லைவ் டெலிகாஸ்ட் படங்களை இயக்கிய இவர், கடந்த ஆண்டு சிம்புவிற்கு மாநாடு மூலம் பெரிய ரீஎண்ட்ரி கொடுத்தார். தனது இயக்கத்திற்கு மீண்டும் ஒரு ரீஎண்ட்ரி கொடுத்த வெங்கட் பிரபு, தற்போது பார்ட்டி என்னும் படத்தை இயக்கி வருகிறார். சில படங்களில், நடிகராகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
இவர் திரையுலகில் அடியெடுத்து வைத்து 15 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். அஜித் அவர்களுக்கு மாஸ் திரைப்படமாக அமைந்து மிகப்பெரிய வெற்றியைத் தந்த திரைப்படம் தான் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கத்தில் நெகட்டிவ் வேடத்திலும் ஸ்டைலாக தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாக பண்ணி இருப்பார்.
மேலும், அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து மங்காத்தா 2 எடுக்க விரும்பியதாகவும், அதை மங்காத்தா ஷூட்டிங் நேரத்திலேயே விஜய் மற்றும் அஜித் அவர்களிடம் கதை சொன்னதாகவும் ஒரு பேட்டியில் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் அஜித் இணைந்து நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கங்கை அமரன் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தி அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.