விஜய்யின் வாரிசு பட ஷூட்டிங் நிறுத்தம் ? படத்தின் முக்கிய பிரபலம் மருத்துவமனையில் அனுமதி ! தீயாய் பரவும் தகவல் !
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர், இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்தது. இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படம் வரும் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வந்தது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.
படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்களும் வீடியோக்களும் கசிந்து படக்குழுவை டென்ஷனில் ஆழ்த்தியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாரிசு படத்தின் ஷூட்டிங், திடீரென நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம் இயக்குனர் வம்சி தானாம். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளாராம். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஒரு வாரம் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்களாம். இதனால் தற்போது அவர் ஓய்வில் இருக்கிறாராம்.
அவர் உடல்நலம் தேறி வந்த பின்னர் தான் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். வாரிசு படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய உள்ளனர். வருகிற தீபாவளி பண்டிகையன்று வாரிசு படத்தின் முதல் பாடல் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.