ஷூட்டிங்கில் ரசிகர்களை காண வந்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர், இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்தது. இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வந்தது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கள் ரொமான்டிக் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியானது. தமன் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு, விவேக் லிரிகள் வரிகளை எழுதியுள்ளார். தளபதி விஜய் மற்றும் MM மானஸ்வி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.
‘ரஞ்சிதமே’ பாடல் நேற்று வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பல படங்களின் மெட்டை காப்பி அடித்தே இந்த ஒரு பாடலை தமன் உருவாகியுள்ளதாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகிறது. ராஷ்மிக மந்தனாவையும் “கரகாட்டக்காரன்” திரைப்படத்தில் வரும் கோவை சரளாவை ஒப்பிட்டு கலாய்த்திருந்தனர்.
இந்நிலையில், “வாரிசு” படப்பிடிப்பின் போது செட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. வாரிசு படப்பிடிப்பில் இருந்து விஜய் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தளபதி விஜய் வந்ததை அறிந்து அங்கு ரசிகர்கள் கூடியுள்ளனர். இது தெரிந்த தளபதி விஜய் அவர்களை காண வந்து கை அசைத்து சென்றுள்ளார் . இந்த வீடியோ ரசிகர்களிடம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Good morning nanbargale 💖#varisu #Thalapathy67𓃵 recently click #Thalapathy 😘😘😘😘😘😘😘 pic.twitter.com/HenSuhtj4I
— ✨THALAPATHY✨ SHIVA (@Shivaku66721254) November 14, 2022
Latest Recent Shooting Spot Click #Varisu @actorvijay ❤️
— Mersal VIJAY (@Mersalvijayoffl) November 15, 2022
pic.twitter.com/krXdebXEBs