'அட பாவிங்களா அநியாயத்துக்கு sync பண்றீங்களே?' ரஞ்சிதமே பாட்டுல ராக்கம்மா கையத்தட்டு ரஜினி..
![varisu ranjithame and thalapathy raakamma kaiya thattu song sync video getting viral on social media](/images/2022/12/17/varisu-rajinicover.jpeg)
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர், பீஸ்ட் இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய். இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என ஒரு பிரபல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் இருந்து ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’ என 2 பாடல்கள் வெளியாகி சூப்பர் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கடந்த மாதம் 5ம் தேதி வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், தளபதி விஜய் மற்றும் MM மானஸ்வி குரலில் ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ட்ரெண்ட் ஆனது.
இந்நிலையில், நடிகர் சதீஷ் இந்தப் பாடலின் இன்னொரு வெர்ஷனை வெளியிட்டுள்ளார். அதில், “அடப்பாவிகளா அநியாயமா சிங்க் பண்றீங்களே” என பதிவிட்டுள்ள அவர், ரஞ்சிதமே பாடலுக்கு ரஜினி டான்ஸ் ஆடும் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் இளையராஜா இசையில் ஹிட்டடித்த பாடல் ராக்கம்மா கைய தட்டு பாடலுக்கு ரஜினி டான்ஸ் ஆடியிருந்ததை, அப்படியே ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு மேட்ச் செய்து வீடியோ ரெடி செய்துள்ளனர் ரசிகர்கள். இதனை ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், சிலர் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.
Adappaavingalaaa Aniyaya sync pandringale 😍😍😍 pic.twitter.com/15GP6uVTnZ
— Sathish (@actorsathish) December 16, 2022