வாரிசு படத்தின் இந்த ஷூட்டிங் போட்டோ'ல இத நோட் பண்ணீங்களா? எப்படி தான் கண்டுபிடிக்கிறாங்களோ?
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர், இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்தது. இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வந்தது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கள் ரொமான்டிக் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியானது. தமன் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு, விவேக் லிரிகள் வரிகளை எழுதியுள்ளார். தளபதி விஜய் மற்றும் MM மானஸ்வி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.
‘ரஞ்சிதமே’ பாடல் நேற்று வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பல படங்களின் மெட்டை காப்பி அடித்தே இந்த ஒரு பாடலை தமன் உருவாகியுள்ளதாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகிறது. ராஷ்மிக மந்தனாவையும் “கரகாட்டக்காரன்” திரைப்படத்தில் வரும் கோவை சரளாவை ஒப்பிட்டு கலாய்த்திருந்தனர்.
இந்நிலையில், “வாரிசு” படப்பிடிப்பின் போது செட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்பங்கள் இணையத்தில் வெளியாகிய நிலையில், அதில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார். அதாவது விஜய் மற்றும் இயக்குனர் வம்சி இருக்கும் அந்த புகைப்படத்தில் கவனிக்கப்பட வேண்டியது
தளபதி படிக்கும் ஸ்கிரிப்ட் பேப்பர் தான். அதனை உற்றுநோக்கி கவனித்தால் ஸ்கிரிப்ட் தமிழில் எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கும் படத்தின் ஸ்கிரிப்ட் தமிழில் இருப்பதை பார்த்து விஜய் ரசிகர்கள் வியந்து உள்ளனர். மேலும், படத்தின் Sciprt வெளியில் தெரியும்படியா இவ்ளோ அலட்சியமாக இருப்பது என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.