பல பாடல்களின் அட்டை காப்பியா வாரிசு பட 'ரஞ்சிதமே'? வீடியோவுடன் வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர், இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்தது. இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வந்தது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கள் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இப்படத்தின் புகைப்படங்கள், செம ஸ்டைலிஷான லுக்கில் விஜய்யின் அந்த புகைப்படங்கள் செம வைரலாகின.
இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்து வந்த நிலையில், படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ ரொமான்டிக் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் இன்று நவம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்து அதன் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டனர்.
விஜய்யின் மெர்சலான மூமென்ட்ஸ், செம செட் என தமன் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு, விவேக் லிரிகள் வரிகளை எழுதியுள்ளார். தளபதி விஜய் மற்றும் MM மானஸ்வி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.
இந்நிலையில், ரஞ்சிதமே பாடல் கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியானது. இப்பாடல் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று நல்ல வியூஸ்களை பெற்று வருகிறது. விஜய் ராஷ்மிகா இடம்பெற்றுள்ள ரொமான்டிக் பாடலான இப்பாடல் தளபதி விஜய் குரலில் தமன் இசையமைத்துள்ள இப்பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ளார்.
‘ரஞ்சிதமே’ பாடல் நேற்று வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பல படங்களின் மெட்டை காப்பி அடித்தே இந்த ஒரு பாடலை தமன் உருவாகியுள்ளதாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகிறது. பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியான முதலே, ஒஸ்தி படத்தில் வாடி வாடி பொண்டாட்டி பாடல் போலவே இருப்பதாக ஒப்பிட்டு வீடியோ பதிவிட்டு வந்தனர் நெட்டிசன்கள்.
இந்நிலையில், அதே போல் மானஸ்வி பாடும் ‘காட்டு மல்லி கட்டி வச்சா.. கலகலப்பா பொட்டு வச்சா..’ சங்கதி பருத்தி வீரன்படத்தில் இடம்பெற்ற நெத்தியில பொட்டு வச்சி நெய்வரான சேலை கட்டி என்கிற பாடலுடன் ஒப்பிட்டும் , முட்ட முட்ட கண்ணழகா.. என்ற பாடலுடன் ஒப்பிட்டும் கலாய்த்து வருகிறார்கள். இது குறித்த சில வீடியோக்களும், ட்ரோல்களுடம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
எனக்கு ரெண்டும் ஒன்னா தான் தெரிஞ்சிச்சி அதான் கம்பேர் பண்ணிட்டேன்.. மத்தபடி சாங்க் நல்லா தான் இருக்கு 😉 pic.twitter.com/FlF8ODQimA
— Dr.தண்டச் சோறு (@siya_twits) November 5, 2022
— க.சரவணன் (@VckSaravanan6) November 5, 2022