மகேஷ் பாபு - விஜய்.. அப்டியே இருக்கு.. அப்போ ரீமேக் தானா? வைரலாகும் போட்டோஸ்!

varisu and maharishi photos are compared by fans and question it as remake

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.

varisu and maharishi photos are compared by fans and question it as remake

மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர், இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்தது. இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

varisu and maharishi photos are compared by fans and question it as remake

இப்படம் வரும் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வந்தது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

varisu and maharishi photos are compared by fans and question it as remake

படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்களும் வீடியோக்களும் கசிந்து வருகிறது. இரண்டு அண்ணங்களுக்கு தம்பியாக விஜய் நடிக்கும் இந்த படத்தில் வெளிநாட்டில் இருந்த நாயகன் குடும்பத்திற்காக கிராமத்திற்கு திரும்பும் தோற்றத்தில் விஜய் நடிக்கிறாராம். இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய். தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது.

varisu and maharishi photos are compared by fans and question it as remake

வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கள் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இப்படத்தின் புத்தம் புதிய புகைப்படங்கள் நேற்று வெளியாகின. செம ஸ்டைலிஷான லுக்கில் விஜய்யின் அந்த புகைப்படங்கள் செம வைரலாகின.

varisu and maharishi photos are compared by fans and question it as remake

இதற்கிடையே தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் கடைசியாக வெளியான மகரிஷி திரைப்படத்தில் நடிகர் மகேஷ் பாபு அணிந்துள்ள உடை மற்றும் காட்சிகள் வாரிசு திரைப்படத்தை போலவே இருப்பதால் இரண்டு திரைப்படத்தை ஒப்பிட்டு வருகின்றனர்.

Share this post