'ராதிகாவ ஏன் அம்மானு கூப்பிடனும்.. அவங்க என் அப்பாவோட 2வது மனைவி.. எனக்கு ஆண்ட்டி தான்.. ' நடிகை வரலக்ஷ்மி பளீர் !

Varalakshmi sarathkumar speaks about radhika sarathkumar and her relationship

பிரபல நடிகர் சரத் குமார் அவர்களின் மகள் வரலக்ஷ்மி சரத் குமார். பாய்ஸ், காதல், சரோஜா போன்ற வெற்றி படங்களில் கதாநாயகியாக இவரை அனுகியபோது இந்த வாய்ப்புகளை நிராகரித்தார் வரலக்ஷ்மி. இதனைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் அறிமுக இயக்குனராக இயக்கிய போடா போடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

Varalakshmi sarathkumar speaks about radhika sarathkumar and her relationship

இதனைத் தொடர்ந்து, இவருக்கு கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்பட வாய்ப்புகள் வரவே அதிலும் நடித்து வந்தார். தமிழில், பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் வித்தியாசமான போல்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக நிறைய பாராட்டுக்கள் பெற்றார். பின்னர், விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, மிஸ்டர் சந்திரமௌலி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

Varalakshmi sarathkumar speaks about radhika sarathkumar and her relationship

முக்கியமாக, சண்டக்கோழி 2 மற்றும் சர்க்கார் படத்தில் செம வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாரி 2, நீயா 2, டேனி போன்ற திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், தற்போது அடுத்தடுத்து சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Varalakshmi sarathkumar speaks about radhika sarathkumar and her relationship

இவர் நடிகை ராதிகா குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, “சிலர் என்னிடம் ஏன் நீங்க ராதிகாவை அம்மானு கூப்பிடாம ஆண்ட்டினு கூப்பிடுறீங்கனு கேட்குறாங்க. நான் எதுக்கு ராதிகாவை அம்மானு கூப்பிடனும். அவங்க என் அப்பாவோட 2வது மனைவி. அவ்ளோ தான்.

Varalakshmi sarathkumar speaks about radhika sarathkumar and her relationship

நான் ராதிகா மீது கோபத்தில் இருப்பதாகவும், அவரை எனக்கு பிடிக்காது எனவும், நான் அவரை வெறுப்பதாகவும் பல விதமாக ஒவ்வொருவரும் கூறி வருகின்றனர். அப்படி எதுவுமே இல்லை. எங்கள் இருவருக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வேலை செய்கிறோம். அதனால் அவரை அம்மானு எப்படி கூப்பிட முடியும்.

Varalakshmi sarathkumar speaks about radhika sarathkumar and her relationship

என்னுடைய அம்மாவை தான் நான் அம்மானு கூப்பிட முடியும். ஒருவர் தான் அம்மாவாக இருக்க முடியும். சமூக வலைதளங்களில் வேலையில்லாத வெட்டி பசங்க எதையாச்சு சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க. அதுக்கெல்லாம் நாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது” என போல்டாக வரலட்சுமி சரத்குமார் பதிலளித்துள்ளார்.

Share this post