'அம்மா இறந்ததற்கு காரணமே இது தான்' ரகசியங்களை போட்டுடைத்த வனிதா.. வைரல் வீடியோ!
பிரபல திரையுலக நட்சத்திரங்கள் விஜய குமார் மற்றும் மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவரது சகோதரிகள் பிரபல நடிகைகள் ப்ரீதா, ஸ்ரீ தேவி, சகோதரர் நடிகர் அருண் விஜய்.
2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் அவர்களை திருமணம் செய்தார் வனிதா. இவர்களுக்கு ஸ்ரீ ஹரி என்னும் மகனும், ஜோவிகா என்னும் மகளும் உள்ளனர்.
ஆகாஷ் மற்றும் வனிதா கருத்து வேறுபாடு காரணமாக பிரியவே, ஸ்ரீ ஹரி தாத்தா விஜய குமார் மற்றும் தனது ஆகாஷ் அவர்களுடன் சென்றுவிட்டார்.
பின்னர், வனிதா 2வதாக ஆனந்த் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 2012ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து விட்டனர். 2 மகள்களுடன் தனியே வசித்து வந்த வனிதாவுக்கு எந்த வித ஆதரவும் இல்லாமல் தனியே வாழ்ந்து வந்தார்.
பின்னர், 2020ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார் வனிதா. ஆனால் சில பல பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். 1995ம் ஆண்டு சந்திரலேகா என்னும் படத்தில் விஜய் ஜோடியாக வனிதா நடித்தார். அதனைத் தொடர்ந்து, மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன் போன்ற தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.
பின்னர், சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் எழவே, திரைத்துறையில் இருந்து விலகி இருந்த வனிதா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி மிக பிரபலம் அடைந்தார்.
தற்போது, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல் தொடர்கள் என பங்கேற்று வரும் வனிதா, தனி யூடியூப் சேனல், துணி கடை, மேக் அப் ஆர்ட்டிஸ்ட் என பல அவதாரம் எடுத்து வருகிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ, எஸ்தல் என்டர்டெய்னர் நிறுவனம் சார்பில் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற படத்தை மணி நாகராஜ் இயக்குகிறார். மருத்துவராக ‘நீயா நானா’ கோபிநாத், அனிகா, சீதா, வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வனிதா அவரது தாயார் மஞ்சுளாவின் இறுதி நிமிடங்கள் குறித்து பல பரபரப்பான தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். முதல் கணவருக்கு பிறந்த மகன் ஸ்ரீஹரியை வனிதாவின் தந்தை விஜயகுமார் அழைத்துச் சென்றபோது ஏர்போர்ட்டில் வைத்து தகராறில் ஈடுபட்டார். அப்போது, வனிதா தனது தந்தை, தாய், தந்தையின் மூத்த மனைவியின் மகன் அருண் விஜய் பற்றியும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
அப்போது பேட்டியளித்த மஞ்சுளா, வனிதா என் மகளே கிடையாது. அவள் ராட்சசி. அவள் என் வயிற்றில் பிறந்தால் என்பதை நினைக்கும்போதே எனக்கு கேவலமாக இருக்கிறது என்றெல்லாம் காட்டமாக பேட்டியளித்து இருந்தார். பின்னர் ஒரு கட்டத்தில் மஞ்சுளா இறந்த பின்பு முற்றிலுமாக வனிதா புறக்கணிக்கப்பட்டார். மஞ்சுளாவின் இறுதி சடங்கில் கூட வனிதாவை யாரும் அருகிலேயே சேர்த்துக் கொள்ளவில்லை. இது குறித்து தற்போது தனது பழைய நிகழ்வுகளை ஒரு பேட்டியில் வனிதா பகிர்ந்திருக்கிறார். ஷகிலா உடன் எடுக்கப்பட்ட அந்த பேட்டியில் வனிதா தெரியாத ரகசியங்கள் பலவற்றை போட்டு உடைத்திருக்கிறார்.
ஏர்போர்ட்டில் நடந்த சம்பவத்திற்கு பிறகு ஒரு நாள் தன்னை வீட்டிற்கு வருமாறு மஞ்சுளா அழைக்க, வீட்டிற்கு வந்து விஜயகுமாரின் காலில் விழுந்து கதறி அழுது தான் மன்னிப்பு கேட்டதாகவும், அதன் பின்னர் ஆலப்பாக்கம் வீட்டில் மாடியில் மஞ்சுளா வசித்து வந்ததாகவும், அதே வீட்டில் கீழ் தளத்தில் தானும் மகன் ஸ்ரீஹரி, மகள்கள் ஜோவிதா, ஜெயனிதா ஆகியோருடன் வசித்து வந்ததாகவும் கூறினார். தனது தாயார் மஞ்சுளாவிற்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அவருக்கு மூன்று முறை மஞ்சள் காமாலை வந்ததாகவும், தன்னை பற்றி அவர் பேட்டியளிக்கும் போது அதிக குடிபோதையில் இருந்ததை இந்த உலகமே பார்த்ததாகவும் வனிதா கூறினார்.
தனது தாயாரை ஏமாற்றி தன்னை பற்றி அவ்வாறு அவதூறு பேச வைத்தனர் என்றும், இறுதியாக தன்னுடன் வாழ்ந்து கொண்டிருந்தபோது அவரது உடல்நிலை மிக மோசமானதாகவும், 72 மணி நேரத்தில் அவர் இறந்து விடுவார் என்ற சூழ்நிலையில் அவர் தன்னிடம் சில விஷயங்களை சொன்னதாகவும் வனிதா கூறினார். இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞராக இருக்கும் ராம்ஜெத்மலானியை அழைத்து அனைத்து பத்திரங்களிலும் உன் பெயரை சேர்க்க வேண்டும் என்றும், என்னை ஒரு வீடியோவாக எடு, நான் சில உண்மைகளை சொல்ல வேண்டும் என்று மஞ்சுளா கூறியதாகவும்,
ஆனால் தற்போது இந்த வீடியோ எடுத்தால் தனக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும் என்று சொல்லி தான் அதை மறுத்து விட்டதாகவும், தன் தந்தை விஜயகுமாரிடம் வனிதாவை விட்டு விடாதீர்கள் என்று கடைசியாக மஞ்சுளா கூறியதாகவும் வனிதா பேசினார். பின்னர் தனது தாயார் இறந்த பிறகு இறுதிச் சடங்கை செய்யக்கூட தனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அப்போது சரத்குமாரும் ராதாரவியும் தான் என்னை முன்னால் அழைத்து இறுதிச்சடங்குகளை செய்ய வைத்தனர் என பலவற்றை பேசியுள்ளார்.