*த்தா *ம்மா கண்ட மாதிரி திட்டுது.. வனிதா பேசுனதை யப்பா காதுலயே கேட்க முடியல..!
அந்தகன் படம் வரும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி ரிலீசாக உள்ளது. பல வருடங்கள் கழித்து பிரசாந்த் ஹீரோவாக களமிறங்க இருப்பதால் கண்டிப்பாக இந்த படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் பட குழுவினர் இருக்கின்றனர். இந்த படத்தை பிரசாந்தின் தந்தையான தியாகராஜனே இயக்கியிருக்கிறார். இந்த சூழ்நிலையில், படத்தில் நடித்த வனிதா விஜயகுமார் குறித்து தியாகராஜன் பேசியிருக்கும் விஷயம் வைரலாகி வருகிறது.
வனிதா குறித்து பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பேசிய பேசியபோது, இந்த படத்தின் ஒரு காட்சிக்கு எமோஷன் வேண்டும் என்பதற்காக வனிதாவை அழைத்து உனக்கு தெரிந்த கெட்ட வார்த்தை எல்லாம் பேசு என்று தான் சொன்னேன். அவரோ வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு பச்சை பச்சையாக பேசிவிட்டார்.
அதனை பார்த்து அங்கிருந்தவர்கள் சார் இப்படி பேசுறாங்க சென்சார்ல என்ன பண்ணப் போறீங்க என்று கேட்டார்கள். அதை அப்ப பார்த்துக்கலாம். இப்போதைக்கு இந்த சீனுக்கு எமோஷன் தேவை என்று சொல்லித்தான் வைத்தேன் என்று தியாகராஜன் பேசியிருக்கிறார்.