'கோமாளிங்களா, திருந்தவே மாட்டிங்களா?' நயன் - விக்கி வாடகைத்தாய் சர்ச்சை குறித்து பதிவிட்ட வனிதா
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. திருமணம் முடிந்த கையோடு கோவில், கேரளா, தேனிலவு சென்றது என அனைத்து புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில், அக்டோபர் 9ம் தேதி, திடீரென விக்னேஷ் சிவன் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில், நயனும் நானும் அப்பா அம்மா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என போட்டோவுடன் அறிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
கர்ப்பமாக நயன்தாரா இல்லை, திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆகியுள்ளது, அப்புறம் எப்படி என ரசிகர்கள் முதல் அனைவரும் குழம்பியுள்ள நிலையில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது தான் தற்போது சர்ச்சைக்கு காரணம் ஆகி இருக்கிறது.
இது குறித்து சில திரையுலக பிரபலங்கள் சிலர் வாழ்த்து தெரிவித்தும், சிலர் திட்டியும் வருகின்றனர். இந்நிலையில், இப்படி பல்வேறு விவாதத்திற்கு இந்த விஷயம் ஆளாகியுள்ள நிலையில், இது குறித்து விமர்சிப்பவர்களை வனிதா விஜயகுமார் ட்விட்டரில் வெளுத்து வாங்கியுள்ளார். முட்டாள்கள் சொல்வதைப் பற்றி எல்லாம் கவலை பட வேண்டாம், வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள் என தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும் வாடகைத்தாய் குறித்த சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, எங்களுக்கும் லீகல் தெரியும், எங்களுக்கும் மெடிக்கல் தெரியும் என்று சில முட்டாள்கள் நேரத்தை வீணாக்கி வருகிறார்கள், ஆனால் நீங்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
வாடகைத்தாய் குறித்த விதிகளை முழுமையாக அறிந்து கொள்ளாமலா நயன்தாரா- விக்னேஷ் தம்பதிகள் இரட்டை குழந்தைகள் பெற்றிருப்பார்கள் என வனிதா விஜயகுமாரின் பதிவை பலர் வரவேற்று வருகிறார்கள்.
what is more beautiful than the Birth of 2 innocent children born to loving parents who can provide and give them the life all children deserve to have.
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 11, 2022