ரவீந்தர் - மஹாலக்ஷ்மி திருமணம் குறித்த பதிவிட்ட வனிதா.. ஏன் இப்டி சொல்லிருக்காங்க ?
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் டாபிக்காக வலம் வருவது தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமண விஷயம் தான். ரவீந்தர் சந்திரசேகரன், தமிழ் திரையுலகில் சுட்ட கதை, முருங்கைக்காய் சிப்ஸ், கொலை நோக்கு பார்வை, கல்யாணம் போன்ற பல திரைப்படங்களை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக வலம் வருபவர்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மி அவர்களை திருமணம் செய்து கொண்டார். படிக்கும் காலத்திலேயே கலை துறையில் அடியெடுத்து வைத்த இவர், நிறைய சீரியல்களில் நடித்துள்ளார். முக்கியமாக பல தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அன்பே வா, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் போன்ற பல பிரபல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது, ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவருக்குமே இது 2வது திருமணம்.
இந்நிலையில், இவர்கள் திருமணம் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால், விளக்கங்கள் கொடுக்கும் வகையில், பல பேட்டிகளில் இருவரும் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், வனிதா விஜயகுமார் போட்டுள்ள ட்வீட் ஒன்று தற்போது செம வைரலாகி வருகிறது. நடிகை வனிதா பற்றி அனைவரும் அறிவர். அவர் பீட்டர் பால் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்த போது, ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருந்ததால், இந்த திருமணத்தை தயாரிப்பாளர் ரவீந்திரன் கடுமையாக எதிர்த்தார். மேலும் பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாகவும் இருந்து வந்தார்.
இதனால் வனிதாவுக்கும் ரவீந்திரனுக்கும் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. ஒரு நாள் லைவில் இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர். பின்னர் தொடர்ந்து ட்விட்டரிலும் வார்த்தை போர்கள் நீடித்து வந்தன. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த ரவீந்தர், வனிதா விவாகரத்து பெறாத ஒருவருடன் திருமணம் செய்திருந்தார். அதனால் தான் அவரை கடுமையாக விமர்சித்து இருந்தேன். எனக்கும் எனது மனைவிக்கும் முறையாக விவாகரத்து ஆகியுள்ளதால், நாங்கள் முறையாகத்தான் திருமணம் செய்து இருக்கிறோம்.
எனவே இந்த விஷயம் தெரிந்தால் வனிதா எங்களை மனதார வாழ்த்தி இருப்பார் என்று பேட்டி அளித்திருந்தார். ஆனால் தற்போது ட்விட்டரில் ட்வீட் போட்டிருக்கும் வனிதா மறைமுகமாக ரவீந்தரை கடுமையாக சாடி இருக்கிறார். அதில் அவர் மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப் பட முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக பிஸியாக இருக்கிறேன். கர்மா ஒரு பிட்ச்..மற்றவர்களுக்கு திருப்பி கொடுக்க கர்மாவுக்கு தெரியும், நான் கர்மாவை நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த பலரும் ரவீந்தரனைத் தான் வனிதா கூறுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.