'தந்தையுடன் இருக்கும் 2வது மகள்' காரணத்துடன் வனிதா சொன்ன உண்மை.. வைரலாகும் வீடியோ !
பிரபல திரையுலக நட்சத்திரங்கள் விஜய குமார் மற்றும் மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவரது சகோதரிகள் பிரபல நடிகைகள் ப்ரீதா, ஸ்ரீ தேவி, சகோதரர் நடிகர் அருண் விஜய்.
2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் அவர்களை திருமணம் செய்தார் வனிதா. இவர்களுக்கு ஸ்ரீ ஹரி என்னும் மகனும், ஜோவிகா என்னும் மகளும் உள்ளனர். ஆகாஷ் மற்றும் வனிதா கருத்து வேறுபாடு காரணமாக பிரியவே, ஸ்ரீ ஹரி தாத்தா விஜய குமார் மற்றும் தனது ஆகாஷ் அவர்களுடன் சென்றுவிட்டார்.
பின்னர், வனிதா 2வதாக ஆனந்த் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 2012ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து விட்டனர். 2 மகள்களுடன் தனியே வசித்து வந்த வனிதாவுக்கு எந்த வித ஆதரவும் இல்லாமல் தனியே வாழ்ந்து வந்தார்.
பின்னர், 2020ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார் வனிதா. ஆனால் சில பல பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
1995ம் ஆண்டு சந்திரலேகா என்னும் படத்தில் விஜய் ஜோடியாக வனிதா நடித்தார். அதனைத் தொடர்ந்து, மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன் போன்ற தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.
பின்னர், சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் எழவே, திரைத்துறையில் இருந்து விலகி இருந்த வனிதா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி மிக பிரபலம் அடைந்தார்.
தற்போது, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல் தொடர்கள் என பங்கேற்று வரும் வனிதா, தனி யூடியூப் சேனல், துணி கடை, மேக் அப் ஆர்ட்டிஸ்ட் என பல அவதாரம் எடுத்து வருகிறார்.
இந்நிலையில், வனிதாவின் இளையமகள் ஜெயனிதா வீடியோக்களிலோ அல்லது பொது இடங்களிலேயே காட்டப்பட்டதே இல்லை. இது குறித்து பலரும் கேட்டிருந்தார்கள். அதற்கு வனிதாவும் எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் இருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில், அதுகுறித்து வனிதா பேசிய வீடியோ செம வைரலாகி வருகிறது.
அதில், இளைய மகளை அவரது தந்தை அழைத்து சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார். ‘தற்போது என் இளைய மகள் ஹைதராபாத்தில் படித்துக் கொண்டு இருக்கிறாள். அவள் அவரது அப்பாவுடன் இருக்கிறாள், சமீபத்தில் கூட அவளை சென்று பார்த்து விட்டு வந்தேன். ஆனால், அவள் மனசெல்லாம் இங்கு தான் இருக்கும். நான் தற்போது பிஸியாக இருக்கிறேன் மேலும் இந்த சமயத்தில் கண்டிப்பாக அவளுடன் யாராவது இருக்க வேண்டும் அங்கு அவள் பாதுகாப்பாக இருக்கிறாள்’ என்று கூறியுள்ளார்.
#Vanitha About Her Second Daughter pic.twitter.com/ViSDykqTvI
— chettyrajubhai (@chettyrajubhai) September 25, 2022