Viral Video: 'Publicityகாக பண்றீங்களா..திருமண வாழ்க்கை..' என வனிதாவின் personal விஷயத்தை கிளறிய தேவயானி.. வெடித்த மோதல்..

Vanitha personal questions asked by devayani in pudhu pudhu arthangal promo video getting viral

90ஸ் களில் டாப் நடிகையாக வலம் வந்த நடிகை தேவயானி, சூர்யா வம்சம், காதல் கோட்டை, பாரதி போன்ற தமிழ் திரைப்படங்கள் மூலம் பிரபலம் அடைந்தவர். பெங்காலி, தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட 50 படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரையில் கோலங்கள் தொடரின் மூலம் பிரபலம் அடைந்தார். சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் செம பேமஸ்.

அதன் பின்னர், மஞ்சள் மகிமை, கோடி முல்லை, முத்தாரம், ராசாத்தி போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

Vanitha personal questions asked by devayani in pudhu pudhu arthangal promo video getting viral

தற்போது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புது புது அர்த்தங்கள் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எப்எம் சேனல் ஒன்றில் பணியாற்றி வருகிறார் தேவயானி. இதில் தற்போது கெஸ்ட் ரோலில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

தேவயானி பணியாற்றும் எப்எம் சேனலுக்கு கெஸ்ட் ஆக வரும் வனிதாவை பேட்டி எடுப்பதற்கான கேள்விகளை எழுதி கொடுக்கிறார்.

அதில், வனிதாவின் சொந்த வாழ்க்கை பற்றிய கேள்விகள் கேட்கப்படுகிறது. அவர் பப்ளிசிட்டிக்காக செய்யும் விஷயங்கள், திருமணம் போன்ற கேள்விகள் இருந்ததால் அவர் கடும் கோபமாகிறார். இந்த ப்ரோமோ செம வைரல் ஆகி சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவி வருகிறது.

Share this post