வனிதாவின் முன்னாள் கணவர் பீட்டர் பால்'ஆ இது ? இப்டி ஆயிட்டாரு.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.
பிரபல திரையுலக நட்சத்திரங்கள் விஜய குமார் மற்றும் மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவரது சகோதரிகள் பிரபல நடிகைகள் ப்ரீதா, ஸ்ரீ தேவி, சகோதரர் நடிகர் அருண் விஜய்.
2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் அவர்களை திருமணம் செய்தார் வனிதா. இவர்களுக்கு ஸ்ரீ ஹரி என்னும் மகனும், ஜோவிகா என்னும் மகளும் உள்ளனர். ஆகாஷ் மற்றும் வனிதா கருத்து வேறுபாடு காரணமாக பிரியவே, ஸ்ரீ ஹரி தாத்தா விஜய குமார் மற்றும் தனது ஆகாஷ் அவர்களுடன் சென்றுவிட்டார்.
பின்னர், வனிதா 2வதாக ஆனந்த் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 2012ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து விட்டனர். 2 மகள்களுடன் தனியே வசித்து வந்த வனிதாவுக்கு எந்த வித ஆதரவும் இல்லாமல் தனியே வாழ்ந்து வந்தார்.
பின்னர், 2020ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார் வனிதா. ஆனால் சில பல பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
1995ம் ஆண்டு சந்திரலேகா என்னும் படத்தில் விஜய் ஜோடியாக வனிதா நடித்தார். அதனைத் தொடர்ந்து, மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன் போன்ற தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.
பின்னர், சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் எழவே, திரைத்துறையில் இருந்து விலகி இருந்த வனிதா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி மிக பிரபலம் அடைந்தார்.
தற்போது, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல் தொடர்கள் என பங்கேற்று வரும் வனிதா, தனி யூடியூப் சேனல், துணி கடை, மேக் அப் ஆர்ட்டிஸ்ட் என பல அவதாரம் எடுத்து வருகிறார்.
கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை வனிதா 3வது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தின் போது பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்தது. அதையும் மீறி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் ஆன கொஞ்ச நாட்களிலேயே வனிதாவிற்கும், பீட்டர் பாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். இது குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்து இருந்தது.
அவர்கள் பிரிந்த பின்னர், வனிதா தனது இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள தொடங்கிவிட்டார். ஆனால், பீட்டர் பால் குறித்த எந்த ஒரு செய்தியும், புகைப்படமும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில், பீட்டர் பால் குறித்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வனிதாவின் பிரிவிற்கு பிறகு பீட்டர் பாலுடைய லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி தற்போது வெளியாகியிருப்பதால், அந்த புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவருடைய முகம் மிகவும் ஒல்லியாக இருப்பதை பார்த்து நெட்டிசன்கள் பலரும், இது தேவையா ? இவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டதே ! என பலவிதமாக வருத்தத்துடன் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.