கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை வனிதா.. அவரே வெளியிட்ட புகைப்படம்.. காட்டுத்தீ போல பரவும் போட்டோ !

Vanitha as pregnant lady acting in vasuvin karpinigal

பிரபல திரையுலக நட்சத்திரங்கள் விஜய குமார் மற்றும் மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார்.

இவரது சகோதரிகள் பிரபல நடிகைகள் ப்ரீதா, ஸ்ரீ தேவி, சகோதரர் நடிகர் அருண் விஜய்.

Vanitha as pregnant lady acting in vasuvin karpinigal

2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் அவர்களை திருமணம் செய்தார் வனிதா. இவர்களுக்கு ஸ்ரீ ஹரி என்னும் மகனும், ஜோவிகா என்னும் மகளும் உள்ளனர்.

ஆகாஷ் மற்றும் வனிதா கருத்து வேறுபாடு காரணமாக பிரியவே, ஸ்ரீ ஹரி தாத்தா விஜய குமார் மற்றும் தனது ஆகாஷ் அவர்களுடன் சென்றுவிட்டார்.

Vanitha as pregnant lady acting in vasuvin karpinigal

பின்னர், வனிதா 2வதாக ஆனந்த் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

2012ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து விட்டனர். 2 மகள்களுடன் தனியே வசித்து வந்த வனிதாவுக்கு எந்த வித ஆதரவும் இல்லாமல் தனியே வாழ்ந்து வந்தார்.

Vanitha as pregnant lady acting in vasuvin karpinigal

பின்னர், 2020ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார் வனிதா. ஆனால் சில பல பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

Vanitha as pregnant lady acting in vasuvin karpinigal

1995ம் ஆண்டு சந்திரலேகா என்னும் படத்தில் விஜய் ஜோடியாக வனிதா நடித்தார். அதனைத் தொடர்ந்து, மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன் போன்ற தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.

Vanitha as pregnant lady acting in vasuvin karpinigal

பின்னர், சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் எழவே, திரைத்துறையில் இருந்து விலகி இருந்த வனிதா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி மிக பிரபலம் அடைந்தார்.

Vanitha as pregnant lady acting in vasuvin karpinigal

தற்போது, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல் தொடர்கள் என பங்கேற்று வரும் வனிதா, தனி யூடியூப் சேனல், துணி கடை, மேக் அப் ஆர்ட்டிஸ்ட் என பல அவதாரம் எடுத்து வருகிறார்.

Vanitha as pregnant lady acting in vasuvin karpinigal

வனிதா எது பதிவிட்டாலும் எதாவது ஒரு சர்ச்சையாக அது சமூக வலைத்தளங்களில் உலா வருவது வழக்கம். இந்நிலையில் வனிதா விஜயகுமார் கர்ப்பமாக இருப்பது போல புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரல் ஆனது. பின்னர், தான் தெரிந்தது, அவர் நடிக்கும் கதாபாத்திரத்தின் போஸ்டர் தான் அது என்று.

Vanitha as pregnant lady acting in vasuvin karpinigal

தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ, எஸ்தல் என்டர்டெய்னர் நிறுவனம் சார்பில் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற படத்தை மணி நாகராஜ் இயக்குகிறார்.

2013ம் ஆண்டு, மலையாள மொழியில் வெளியான Zachariayude Garbhinikal என்னும் சூப்பர் ஹிட் காமெடி திரைப்படத்தின் ரீமேக். மலையாள மொழியில் அனீஸ் அன்வர் இயக்கத்தில் நடிகர் லால், ரீமா கலிங்கள், சனுஷா, ஆஷா மற்றும் பலர் நடிப்பில் உருவான திரைப்படம்.

Vanitha as pregnant lady acting in vasuvin karpinigal

ஒரு மருத்துவர் சந்திக்கும் விநோதமான 4 கர்ப்பிணிகள் பற்றிய கதை தான் இது. எதிர்பாராத விதமாக கர்ப்பமாகும் 18 வயது இளம்பெண், கருத்தரிப்பு சிகிச்சை மூலம் கருவுறும் வயதான பெண்மணி என வித்யாசமாக எடுக்கப்படும் திரைக்கதை.

Vanitha as pregnant lady acting in vasuvin karpinigal

தமிழ் மொழியில், மருத்துவராக ‘நீயா நானா’ கோபிநாத், அனிகா, சீதா, வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

Share this post