Viral Video: 'அவனை நேரில் சந்தித்தால் ஓங்கி அறைஞ்சுடுவேன்' மகன் பற்றி கோபமாக பேசிய வனிதா.. வைரலாகும் வீடியோ !
பிரபல திரையுலக நட்சத்திரங்கள் விஜய குமார் மற்றும் மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவரது சகோதரிகள் பிரபல நடிகைகள் ப்ரீதா, ஸ்ரீ தேவி, சகோதரர் நடிகர் அருண் விஜய்.
2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் அவர்களை திருமணம் செய்தார் வனிதா. இவர்களுக்கு ஸ்ரீ ஹரி என்னும் மகனும், ஜோவிகா என்னும் மகளும் உள்ளனர். ஆகாஷ் மற்றும் வனிதா கருத்து வேறுபாடு காரணமாக பிரியவே, ஸ்ரீ ஹரி தாத்தா விஜய குமார் மற்றும் தனது ஆகாஷ் அவர்களுடன் சென்றுவிட்டார்.
பின்னர், வனிதா 2வதாக ஆனந்த் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 2012ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து விட்டனர். 2 மகள்களுடன் தனியே வசித்து வந்த வனிதாவுக்கு எந்த வித ஆதரவும் இல்லாமல் தனியே வாழ்ந்து வந்தார்.
பின்னர், 2020ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார் வனிதா. ஆனால் சில பல பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
1995ம் ஆண்டு சந்திரலேகா என்னும் படத்தில் விஜய் ஜோடியாக வனிதா நடித்தார். அதனைத் தொடர்ந்து, மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன் போன்ற தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.
பின்னர், சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் எழவே, திரைத்துறையில் இருந்து விலகி இருந்த வனிதா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி மிக பிரபலம் அடைந்தார்.
தற்போது, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல் தொடர்கள் என பங்கேற்று வரும் வனிதா, தனி யூடியூப் சேனல், துணி கடை, மேக் அப் ஆர்ட்டிஸ்ட் என பல அவதாரம் எடுத்து வருகிறார்.
இந்நிலையில், தனது முதல் மகன் ஸ்ரீ ஹரி பற்றி அவர் சமீபத்திய இன்டெர்வியூ ஒன்றில் பேசியிருந்தது செம வைரலாகி வருகிறது. ஸ்ரீ ஹரி தன்னுடன் இல்லை என்றாலும் அவரது 21வது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.
மிகுந்த பாசமாக இருந்த வனிதா, அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அவரது மகன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர் பேசியபோது: அவன் ஆள் தான் வளர்ந்திருக்கிறான், அறிவு வளரவில்லை நேரில் பார்த்தால் அறைந்துவிடுவேன் என கோபமாக பேசியுள்ளார். இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகன் மீது பாசமாக இருந்த வனிதா தற்போது திடீரென கோபமடைய காரணம் என்ன என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.