நீங்க பாத்தீங்களா?.. அந்தமாதிரி ரிலேஷன்ஷிப்ல.. நீண்ட நாள் ரகசியத்தை உடைத்த வாணி போஜன்..!
சீரியல்களில் நடித்ததன் மூலமாக வரவேற்பை பெற்றவர் நடிகை வாணி போஜன். பெரும்பாலும் ரசிகர்கள் இவரை சின்னத்திரை நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர்.
முன்னதாக, நடிகை வாணி போஜன் ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டு அம்னீசியா, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, லவ், அஞ்சாமை\ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால், யோகி பாபுவுடன் சட்னி சாம்பார் வெப்சீரிஸில் நடித்துள்ள நடிகை வாணி போஜன் தான் எந்த நடிகருடன் உறவில் இல்லை என்றும், இப்போ சீரியலில் கூட நடிக்க தயார் என்றும், அங்கும் எனக்கு வரவேற்பு உள்ளது என்று கூறிள்ளார்.
முன்னதாக, Triples வெப்சீரிஸில் நடிக்கும் போது நடிகர் ஜெய்யை இவர் காதலித்து வருவதாகவும், இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் கிசுகிசு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
Share this post