"அந்த போட்டோ'ல இருக்கறது நான் இல்ல.. இதெல்லாம் ரொம்ப Cheap.." கடுப்பான வாணி போஜன்..
விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த வாணி போஜன், சென்னை சில்க்ஸ் விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ஓர் இரவு, அதிகாரம் 79 என்னும் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த வாணி போஜன், ஜெயா டிவியில் மாயா சீரியலில் நடித்தார்.
பின்னர், சன் டிவியில் தெய்வமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து இல்லத்தரசிகளின் மனங்களை கவர்ந்தார். இதற்கு பல விருதுகளை பெற்ற இவர், பின்னர் லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தார். இவரது நடிப்புத் திறமை பார்த்து திரைபடவாய்ப்புகள் வர தொடங்கவே தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார்.
ஓ மை கடவுளே மீரா அக்கா கதாபாத்திரம் செம பேமஸ், லாக்கப், மலேஷியா டு அம்னிஷியா போன்ற திரைப்படங்களில் நடித்த இவர், தற்போது கைவசம் நிறைய திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் சீரீஸ் என பிரபலம் பெற்ற இவர், தனது போட்டோ வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், வாணி போஜனும் நடிகர் ஜெய்யும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருந்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும், இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் சொல்லப்பட்டு சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டது.
காதல், ரிலேஷன்ஷிப் என்று பல வதந்தி செய்திகளால் கடுப்பான வாணி போஜன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல வதந்திகள் குறித்து கோபப்பட்டு ரியாக்ஷன் செய்துள்ளார் வாணி போஜன். ஒரு செய்தியில் வாணி போஜன் புகைப்படத்தோடு வேறொருவரின் புகைப்படத்தை சேர்ந்து பகிர்ந்திருக்கும் போட்டோவை பார்த்து நான் அது இல்லை என்று கூறியிருக்கிறார்.
தெய்வமகள் சீரியலில் நடந்த சம்பவத்தை வைத்து ஒரு செய்தியாக மாற்றியிருப்பதையும் பார்த்து கோபப்பட்டிருக்கிறார். மேலும் நான் புடவை கட்டி வந்ததை பார்ப்பதைவிட, நான் அட்ஜெஸ்ட் பண்ணுவதை வைட் பண்ணிட்டு ஜூம் பண்ணுவது என் தப்பில்லை என்று கூறியிருக்கிறார்.
நான் எந்த ஹீரோவோடு சேர்ந்து நடித்தாலும் லவ்வுன்னு எழுதுராங்க, பெரிய ஹீரோவோடு எழுதுங்க என்று காமெடியாக தெரிவித்துள்ளார். அசோக் செல்வன் என் தம்பி மாதிரி, ஜெய்யுடன் காசிப்ஸ் வரும் போது லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்காரு என்பது ரொம்ப சீப்பான விஷயம், லோன் கட்டி வீடு கட்டி இருக்கேன் என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.