'Full'ஆ மூடிட்டு Photo போட்டாலும் HOT'னு Comment பண்றாங்க'.. Vani Bhojan பளீர் பேட்டி !
விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த வாணி போஜன், சென்னை சில்க்ஸ் விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ஓர் இரவு, அதிகாரம் 79 என்னும் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த வாணி போஜன், ஜெயா டிவியில் மாயா சீரியலில் நடித்தார்.
பின்னர், சன் டிவியில் தெய்வமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து இல்லத்தரசிகளின் மனங்களை கவர்ந்தார். இதற்கு பல விருதுகளை பெற்ற இவர், பின்னர் லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தார். இவரது நடிப்புத் திறமை பார்த்து திரைபடவாய்ப்புகள் வர தொடங்கவே தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார்.
ஓ மை கடவுளே மீரா அக்கா கதாபாத்திரம் செம பேமஸ், லாக்கப், மலேஷியா டு அம்னிஷியா போன்ற திரைப்படங்களில் நடித்த இவர், தற்போது கைவசம் நிறைய திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் சீரீஸ் என பிரபலம் பெற்ற இவர், தனது போட்டோ வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது, சமூக வலைத்தளங்களில் பொதுவாக நடிகைகளை எப்படி சித்தரித்து பதிவிடுகின்றனர் எனவும், Full-ஆ மூடிட்டு Photo போட்டாலும் HOT-னு Comment பண்றாங்க என தனது ஆதங்கத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.