Viral Photos: தனது தாய் தந்தைக்கு விஜய் கூட செய்யாத மரியாதையை 'வாரிசு' Audio Launch'ல் செய்த வம்சி..

பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ். எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
பொங்கல் பண்டிகையையொட்டி இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது. என்னதான், திரையுலகை பொறுத்தவரை விஜயை கொண்டாடி வந்தாலும், விஜய் அவர்களின் சொந்த வாழ்க்கை குறித்து நெகட்டிவ் விமர்சனங்களும் கருத்துக்களும் ஏராளமாக உலாவி வருகிறது. அவருக்கும் அவரின் பெற்றோருக்கும் உள்ள கருத்து வேறுபாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வந்தது.
சமீபத்தில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் மற்றும் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இருவருமே கலந்துகொண்டனர். இந்த விழாவிற்கு என்ட்ரி கொடுத்த விஜய் தனது தாயிடம் மிகவும் சகஜமாக வெறும் கை மட்டும் கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டார்.
இதை கவனித்த நெட்டிசன்கள் பலரும், ‘அவர் உங்களுடைய தாய் அவருக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இவ்வளவு தானா, அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் கூட வாங்க மாட்டீர்களா’ என்று விஜய்யை கேள்வி கேட்க துவங்கிவிட்டனர். இது பெரும் சர்ச்சையாக சமூக வலைத்தளத்தில் இருந்தது.
இந்நிலையில், விஜய் கூட தனது தாய் தந்தைக்கு செய்யாத விஷயத்தை அப்படத்தின் இயக்குனர் வம்சி செய்துள்ளார். இந்த விழாவிற்கு என்ட்ரி கொடுத்த இயக்குனர் வம்சி உடனடியாக வந்து விஜய்யின் தாய் மற்றும் தந்தை இருவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.