‘மாமன்னன்’ படத்தில் இப்டி ஒரு ட்விஸ்ட்.. வடிவேலு'வ காமெடியனா தான பாத்துருக்கீங்க.. ஆனா இதுல !

Vadivelu to act as hero in mamannan twist in movie plot getting viral on social media

பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் மாமன்னன். முதல் இரண்டு படத்திலேயே வெற்றிவாகை சூடிய இவர், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார் மாரி செல்வராஜ்.

Vadivelu to act as hero in mamannan twist in movie plot getting viral on social media

இதையடுத்து உதயநிதி -மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது.

Vadivelu to act as hero in mamannan twist in movie plot getting viral on social media

இது குறித்த அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாமன்னன் படத்தின் கதை குறித்தும், கதாபாத்திரங்கள் குறித்தும் முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதன்படி இப்படத்தில் மாமன்னனாக உதயநிதி நடிக்கவில்லையாம்.

Vadivelu to act as hero in mamannan twist in movie plot getting viral on social media

அது வடிவேலுவின் கதாபாத்திரம் என்றும், அவருக்கு மகனாகத்தான உதயநிதி நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. வடிவேலுவுக்கு எதிரியாக அழகம்பெருமாள், அவரின் வாரிசாக பகத் பாசில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. வித்தியாசமான அரசியல் கதைக்களத்துடன் இப்படத்தை மாரி செல்வராஜ் படமாக்கி வருகிறாராம். இப்படத்தில் கதையின் நாயகனாக வடிவேலு நடிக்கிறார் யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் தான்.

Vadivelu to act as hero in mamannan twist in movie plot getting viral on social media

Share this post